சிங்கிள் டீ பிரச்னை.. ஒரு மெகா ஹிட் படத்திலிருந்தே வெளியேறிய அமலா பால்.. ஆத்தாடி இந்த கூத்தை பாருங்க
சென்னை: நடிகை அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர். விஜய், தனுஷ், ஆர்யா என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர்; இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த உறவு சில வருடங்கள் மட்டும் நீடித்தது. அதனையடுத்து ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் குறித்து இயக்குநர் சற்குணம் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அமலா பால் கேரளாவை சேர்ந்தவர். இங்கே சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சர்ச்சைகளை சந்தித்தார். அதனால் சுதாரித்துக்கொண்ட அவர்; அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து; தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் படங்களை ஓகே செய்தார். அதன் பலனாக மைனா திரைப்படம் வந்தது. அந்தப் படம் மெகா ஹிட்டாகி அவருக்கு சூப்பர் பெயரை பெற்றுக்கொடுத்தது.

பிஸியான நடிகை: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அமலாவுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய்,தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டடிக்க; தெலுங்கிலும் வாய்ப்புகள் அமைந்தன.அங்கேயும் சென்று தனது திறமையை காண்பித்ததால் அங்கேயும் பிஸியானார். இப்படி தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருந்த அவர்; இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். அந்த காதலுக்கு விஜய் வீட்டில் நீண்ட யோசனைக்கு பிறகு சம்மதம் தெரிவித்தார்கள்.
அடுத்த திருமணம்: சம்மதம் கிடைத்த சந்தோஷத்தோடு திருமணம் செய்துகொண்ட அவர்கள்; அதே சந்தோஷத்தோடு சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தார்கள். இரண்டு பேருக்கும் பிரச்னை வந்ததால் பிரியவும் செய்துவிட்டார்கள். விஜய்யை பிரிந்த அமலா பால் சில காலம் தனியாக இருந்துவிட்டு; ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு இப்போது ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். இரண்டு பேரும் சந்தோஷத்தோடு வாழ்ந்துவருகிறார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் களவாணி, வாகை சூட வா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சற்குணம் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "மொத்தம் மூன்று கதைகளை நான் செய்து வைத்திருந்தேன். ஒன்று விஜய்க்காக செய்தது. இன்னொன்று வாகை சூட வா. இன்னொன்று களவாணி. வாகை சூட வா திரைப்படத்தை இரண்டாவதாக இயக்காமல் இருந்திருந்தால் நான் கமர்ஷியல் இயக்குநராகி பொருளாதார ரீதியாக நன்றாக இருந்திருப்பேன். ஆனால் வாகை சூட வா படத்துக்கு பிறகு என்னால் அந்த ரூட்டுக்குள் செல்ல முடியவில்லை.
அமலா பால் பற்றி: ஓவியாவுக்கும், இனியாவுக்கு வேறு பெயர்கள்தான். நான்தான் அவர்களுக்கு அந்தப் பெயரை வைத்தேன். வாகை சூட வா திரைப்படத்தில் முதலில் அமலா பால்தான் ஹீரோயினாக கமிட்டானார். படத்தில் டீ ஆற்றும் சீன் வரும். அந்த சீனுக்கு ஒத்திகை பார்க்க வேண்டும் என சொன்னேன். நன்றாக ஆற்ற வேண்டும் அதற்கு ரிகர்சல் அவசியம் என சொன்னேன். ஆனால் அவரோ டீ ஆற்றுவதற்கு எல்லாம் ரிகர்சலா என கேட்டார். நான் அந்த ஒத்திகையை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் அவரோ ஒத்துக்கொள்ளவில்லை. அதன் காரணமாக அந்தப் படத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications
