விஜய் பிறந்தநாள்.. தவிர்த்த திரிஷா.. வாழ்த்துகூட சொல்லாத அளவுக்கு என்ன பிரச்னை?.. அதுதான் முடிவோ?
சென்னை: நடிகரும், முதலமைச்சருமான விஜய் நேற்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி தமிழ்நாடு முழுவதுமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சூழல் இப்படி இருக்க அவரது உற்ற தோழியான திரிஷா; வாழ்த்தினை எப்படி தெரிவிக்கப்போகிறார் என்று பலரும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் சோஷியல் மீடியாவில் எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய்யும், திரிஷாவும் இதுவரை ஐந்து படங்களி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஸ்க்ரீனில் அவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. அதனால் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள். நிலைமை இப்படி இருக்க விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்னையில் திரிஷாவின் பெயரும் பலமாக அடிபட தொடங்கியது. அவர்களோ அதை பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் ஒரு திருமணத்துக்கு ஜோடியாக மேட்சிங் ட்ரெஸ் போட்டுக்கொண்டு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.

முதல் வரிசையில்: சங்கீதா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடிகை திரிஷாதான் என அந்த செயல்பாட்டை வைத்து பெரும்பாலானோர் உறுதி செய்துகொண்டார்கள். நிலைமை இப்படி இருக்க நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் வென்று முதலமைச்சராகிவிட்டார். அந்த பதவியேற்பு விழாவுக்குகூட வருகை தந்திருந்த திரிஷாவுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.அதேபோல் அஜித்தின் தாய் இறந்ததற்கும் விஜய்யும், திரிஷாவும் நள்ளிரவில் ஒரே காரில் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களும் வருத்தம்: இப்படி விஜய்யின் வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களிலும், முக்கியமான தருணங்களிலும் திரிஷா தவறாமல் இடம்பெற்றுவிடுகிறார். ஆனால் விஜய்யின் ரசிகர்களோ, தொண்டர்களோ இதை கொஞ்சம்கூட விரும்பவில்லை என்பதுதான் கள யதார்த்தம். திரிஷாவிடமிருந்து விஜய் அண்ணா தன்னுடைய பழக்கவழக்கத்தையே நிறுத்திவிட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கிறார்கள். திரிஷாவின் போஸ்ட்டுகளிலும் அவ்வப்போது அப்படி கமெண்ட்ஸ் போடுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
விஜய்யின் பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க நேற்று விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு மாநிலம் முழுவதுமிருந்து வாழ்த்துகள் குவிந்தன. ஏராளமானோர் அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக தலைமை செயலகம், வீடு ஆகிய இடங்களில் குழுமியிருந்தார்கள். விஜய்யின் தாயும், தந்தையும் நேற்று கோட்டைக்கு வந்து தங்கள் மகனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார்கள்.
திரிஷா மிஸ்: நேற்றைய நாள் முழுக்க திரிஷா மீதுதான் அனைவரது கண்களும் இருந்தன. திடீர் திடீரென அதிர்ச்சி கொடுக்கும் அவர்; விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்ன மாதிரியான அதிர்ச்சியை கொடுக்கப்போகிறாரோ என முணுமுணுப்புகள் கேட்டன. ஆனால் அவர் சோஷியல் மீடியாவில் தன்னுடைய வாழ்த்தை தெரிவிக்கவில்லை. நேரிலும் சென்று வாழ்த்தியதாக தெரியவில்லை. இது அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்ன காரணம்?: விஜய்யுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் திரிஷா ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தால் கண்டிப்பாக அவரது ரசிகர்களும், தொண்டர்களும் நிச்சயம் விமர்சிப்பார்கள், ட்ரோல் செய்வார்கள். மேலும் இதை வைத்து தேவையில்லாத பஞ்சாயத்துக்கள், பேச்சுக்கள் எல்லாம் உருவாகும்.
இன்னும் சில நாட்களுக்கு தன்னையும், விஜய்யையும் இணைத்து வைத்து யூடியூபில் இஷ்டத்துக்கு பேசுவார்கள் என்பதால்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என அவருக்கு நெருக்கமான தரப்பிலிருந்து செய்திகள் வந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி இனிமேல் பொது இடங்களில் விஜய்யோடு தோன்றுவதையும் தவிர்க்க வர் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
