Nooru Sami Day 4 Box Office - நூறு சாமி 4வது நாள் வசூல் அவ்வளவுதானா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை மாறிடுச்சே
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கியிருக்கும் திரைப்படம் நூறு சாமி. இதில் சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட அந்தப் படம் வசூலிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் நான்காவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சசி தமிழின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர். அவரது படங்கள் என்றாலே பெண்களுக்கு முக்கியத்துவம், குடும்ப உறவுகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசும். அந்த ஜானரில் இப்போது வந்திருக்கும் திரைப்படம்தான் நூறு சாமி. இதில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான பிச்சைக்காரன் மெகா ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்தது.

ரிலீஸான படம்: ரிலீஸுக்கு முன்னதாகவே செலிபிரிட்டிகளிடம் படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. இருப்பினும் மக்களிடம் எடுபட்டால்தான் ஒரு படம் வெற்றி என்பதால்; அவர்கள் மத்தியில் என்ன மாதிரியான ரிசல்ட்டை பெறப்போகிறது என்ற ஆவலோடு இருந்தது படக்குழு. மக்களும் படத்தின் மீது வைத்த எதிர்பார்ப்போடு; சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படத்தை குடும்பத்தோடு சென்று தியேட்டர்களில் பார்த்தார்கள்.
பெரிய ரெஸ்பான்ஸ்: படத்துக்கு அவர்கள் மத்தியிலும் சூப்பர் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பெண்களின் மறுமணத்தை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருந்தது. தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தாய்க்கு மகன்கள் மறுமணம் செய்து வைத்தார்கள். அந்த உண்மையான சம்பவம்தான் படத்தின் ஒன்லைன். அதனை சசி எமோஷனலோடு கலந்துகட்டி சொல்ல; மக்கள் கண்கள் கலங்கியபடி பார்த்துவிட்டு வந்தார்கள். குடும்பங்களிடம் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சுவாசிகாவுக்கு விருது கிடைக்குமா?: இந்தப் படத்தில் அனைவரையும் வாய் பிளக்க வைத்தது என்றால் சுவாசிகாதான். கைம்பெண் கேரக்டரில் அவர் நடித்திருக்கும் விதம் அட்டகாசமாக இருக்கிறது. நிச்சயம் இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்க வேண்டும்; அவருக்கும் தாய் கிழவி ராதிகாவுக்கும்தான் போட்டியே என்றும் பலரு இப்போதே ஆரூடம் சொல்ல தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விமர்சன ரீதியாக சக்கைப்போடு போடும் நூறு சாமியின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் நிலவரம்: அதாவது Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, முதல் மூன்று நாட்களில் அந்தப் படம் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய்வரை வசூலித்திருந்தது. நான்காவது நாளான நேற்று வசூல் கொஞ்சம் டல்லடிக்கவே செய்துவிட்டது. அதன்படி, நேற்று மட்டும் இப்படம் மொத்தம் 64 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூலித்ததாம். ஆகமொத்தம் நேற்று அந்தப் படத்தின் வசூல் சரிந்துவிட்டது. வேலை நாட்கள் என்பதால்தான் இந்த சரிவு என கருதப்படுகிறது. இதுவரை மொத்தம் நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications
