Jana Nayagan Box Office: பொங்கலுக்கு வந்திருந்தா ஜன நாயகன் வசூல் எப்படி இருந்திருக்கும்.. எச். வினோத் ஓபன்!
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக முடிசூடியுள்ள தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் 5 நாட்களில் 233 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. விஜய்யின் கடைசி படம் மற்றும் அவரது அரசியல் வருகை என ஏகப்பட்ட தடைகளும் சதிகளும் அவருக்கு எதிராக கிளம்பிய நிலையில், படம் பல மாதங்கள் தாமதமாகவே வெளியானது.
ஜன நாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள தளபதி கச்சேரி பாடலில் அந்த கடைசி ஒரு நிமிட ஒன் லாஸ்ட் டான்ஸ் பாட்டுக்காக விஜய்யின் பல சூப்பர் ஹிட் பாடல்களின் இசையை அனிருத் ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தியிருப்பார். அதற்காக மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக எச். வினோத் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது ஏன் என்கிற கேள்விக்கு எச். வினோத் மனம் திறந்து அளித்த பதில் தீயாக பரவி வருகிறது.
ஜன நாயகன் வசூல் குறைவு: அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படம் மொத்தமாக 138 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்த நிலையில், எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் விஜய்யின் கடைசி படமாக வெளியான ஜன நாயகன் திரைப்படம் அதிகபட்சமாக இதுவரை 233 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளது. இந்த வார இறுதியில் மேலும், வசூல் அதிகரித்தாலும் அதிகபட்சமாக 300 கோடி அளவுக்குத்தான் வசூல் வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
5 மடங்கு வந்து இருக்கும்: ஜன நாயகன் திரைப்படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கே வெளியாகி இருந்தால் இப்போ வந்த வசூலை விட 5 மடங்கு அதிக வசூல் வந்திருக்கும். பல மாதங்கள் கால தாமதம். மொத்த படமும் ஹெச்டி தரத்தில் லீக்கான நிலையில், 1.2 கோடி பேர் டவுன்லோடு செய்து படத்தை பார்த்து விட்டனர். ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், குழந்தைகள் படத்தை பார்க்க வரமுடியாமல் போய்விட்டது. முன்னாடியே திட்டமிட்டப்படி படம் வெளியாகி இருந்தால் விஜய் சார் அரசியலுக்கும் பெரிய உதவியாக இருந்திருக்கும். இத்தனை தடைகளையும் தாண்டியே அந்த படம் இப்போ கலெக்ட் செய்துள்ள வசூலே விஜய் சாருக்காக மட்டும் தான் என வெளிப்படையாக கூறியுள்ளார் எச். வினோத்.


Click it and Unblock the Notifications

