Exclusive: ஐஸ் தான் டைட்டில் வின்னர்... பிக் பாஸிடம் மக்கள் ஓட்டெல்லாம் செல்லாது: சினேகன்

கவிஞர் சினேகன் பிக் பாஸ் பற்றி ஒன்இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

பிக் பாஸிடம் மக்கள் ஓட்டெல்லாம் செல்லாது- சினேகன் Exclusive- வீடியோ

சென்னை: பிக் பாஸில் யார் வெற்றி பெறுவார் என்பதை எண்டோமோல் நிறுவனம் தான் முடிவு செய்யும் என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. செம்படம்பர் 30ம் தேதி நடைபெறும் கிராண்ட் பினாலேயில் பிக் பாஸ் பட்டத்தை தட்டிச் செல்லப்போவது யார் என்பது தெரிவிந்துவிடும்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேருக்கு இடையே தான் தற்போது பலத்த போட்டி நிலவி வருகிறது.

[ Exclusive : "என்னை மாதிரி இருக்காதே"... டைட்டிலை வெல்ல ரித்விகாவுக்கு சினேகன் சொன்ன 'சீக்ரெட்' ]

மக்களின் பெரும்பான்மையான ஆதரவு ரித்விகாவுக்கு தான் இருக்கிறது. அவருக்கு அடுத்தப்படியாக தான் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர். ரித்விகாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வரும் சூழலில், கடந்த சீசன் போட்டியாளரான சினேகனை சந்தித்து பேசினோம்.

ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டி:

நடிக்கிறார்கள்

நடிக்கிறார்கள்

பிக் பாஸ் முதல் சீசனில் முடிந்தவரை உண்மையாக இருக்க முயற்சி செய்தார்கள். இப்போது சீசன் இரண்டில் முடிந்தவரை நடிக்க வேண்டுமென முடிவு செய்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் தான் முடிவு செய்வார்

பிக் பாஸ் தான் முடிவு செய்வார்

இப்போது கடைசி வாரத்தில் சீசன் இரண்டு இருக்கிறது. யார் ஜெயிக்க வேண்டும் என்பதை எண்டோமோல் தான் முடிவு செய்யும். மக்கள் ஓட்டு எல்லாம் டைட்டில் வின்னரை முடிவு செய்யாது. ஒருவேளை ரித்விக்காவுக்கு டைட்டில் கிடைத்தால் பிக் பாஸ் நியாயமாக நடக்க தொடங்கியிருக்கிறார் என சந்தோஷப்படலாம்.

யாஷிகாவுக்கு நடந்தது திட்டமிட்ட சதி

யாஷிகாவுக்கு நடந்தது திட்டமிட்ட சதி

யாஷிகா கடைசி வரை, அதாவது 100 நாட்கள் இருந்திருக்க வேண்டும். நான் பார்த்தவரை அவர் மிகவும் ஸ்போர்ட்டிவானவர். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி கிடையாது. ஆனால் யாஷிகாவையும், சென்ட்ராயனையும் வெளியேற்றியதை திட்டமிட்ட சதியாக தான் நான் பார்க்கிறேன்.

எழுதப்பட்ட தீர்ப்பு

எழுதப்பட்ட தீர்ப்பு

பிக் பாஸ் சீசன் 2வின் வெற்றியாளர் ஐஸ்வர்யாதான் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு. ஒருவேளை ரித்விகாவுக்கு கொடுத்தால், அவர்கள் மக்களை மதித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்" என இவ்வாறு கவிஞர் சினேகன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X