Jason Sanjay: பெற்றோர்கள் கொடுத்த பாசிட்டிவ் வைப்.. ஹீரோவா நடிக்கப் போறேனே?.. ஜேசன் சஞ்சய் ஓபன்!

சென்னை: முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, கேத்தரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹெயிஸ்ட் திரைப்படமான 'சிக்மா' உருவாகியுள்ளது. வரும் ஜூலை 31ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் தள்ளிப் போகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Also Read
ஜன நாயகன் கம்மிங்.. ஜேசன் சஞ்சய் 'சிக்மா’ தள்ளிப்போகுதா?.. ஜூலை 1க்கு பிறகு அமைதியான லைகா!
ஜன நாயகன் கம்மிங்.. ஜேசன் சஞ்சய் 'சிக்மா’ தள்ளிப்போகுதா?.. ஜூலை 1க்கு பிறகு அமைதியான லைகா!

லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள நிலையில், விஜய் மகன் தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரை போல இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ள நிலையில், சமீபத்தில் விகடனுக்கு அளித்த அவரது பேட்டி குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Jason Sanjay talks about how his parents give positive support in his decision

அதில், தனது பெற்றோர்கள் அளித்த ஊக்கம் என ஜேசன் சஞ்சய் பேசியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ஜேசன் சஞ்சய் படத்தையும் பெருசா கொண்டாட காத்திருக்கின்றனர்.

Recommended For You
ஹீரோவாக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்?.. அப்பா ரூட்டில் மகன்?
ஹீரோவாக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்?.. அப்பா ரூட்டில் மகன்?

ஹீரோவாக ஆசைப்படல: பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் உங்களை ஹீரோவாக்க நினைத்தார் என்றும் அவர் கதை சொன்ன பிறகும் ஹீரோவாக நடிக்க விரும்பவில்லை என அவரது படத்தை ரிஜெக்ட் செய்துட்டீங்களாமே? என்கிற கேள்விக்கு, அல்போன்ஸ் புத்திரன் சார் ஒரு லெஜண்ட் அவரது டீம் என்னை ஒரு டீனேஜ் காதல் கதையில் நடிக்க அப்ரோச் செய்தது உண்மை தான். ஆனால், அப்போ எனக்கு 20 வயசு கல்லூரி படிப்பையும் முடிக்கல. ஹீரோவாக நடிக்க ஆசைப்படல. ஏதாவது செய்துவிட்டு பிறகு நம்முடைய சக்தி என்ன என்பதை பார்த்து விட்டு பண்ணலாம் என்பதால், என்னை விட நல்ல நடிகர் உங்க படத்துக்கு கிடைப்பார் எனக் கூறி விட்டேன் என செம கூலாக ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.

பெற்றோர்கள் சப்போர்ட்: குடும்பத்தில் சினிமா பிரபலங்கள் உள்ள நிலையில், சிறு வயது முதலே சினிமாவில் ஆர்வம் அதிகம். ஏகப்பட்ட ப்ரீமியர் ஷோக்களுக்கு சென்றுள்ளேன். ஒரு கட்டத்தில் சினிமா இயக்குநராக ஆக முடிவு செய்த நிலையில், என்னுடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பாசிட்டிவான சப்போர்ட்டை கொடுத்து நீ பண்ணு, உன்னால முடியும் என ஊக்கம் அளித்தனர். அதனால், தான் சிக்மா படத்தை இயக்க முடிந்தது என ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார். இந்த படத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா நிறுவனம் சிக்மா புரமோஷனை எப்போது ஆரம்பிக்கும் திட்டமிட்டபடி படம் விரைவில் வெளியாகுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X