ஆண்ட்ரியாவின் காதல் கனவு நனவானது... 'ஹானஸ்ட்லி' பாடல் சொல்லும் செய்தி!
நடிகை ஆண்ட்ரியா ஆங்கில வீடியோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை ஆண்ட்ரியா இயற்றியுள்ள ஹானஸ்ட்லி வீடியோ ஆல்பம் டிரெண்டிங்காகி வருகிறது.
நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவதிலும் வல்லவர் ஆண்ட்ரியா. ஒருபக்கம் கார்த்தி, தனுஷ் ,சிம்பு , பஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம் யுவன் சங்கர் ராஜா ,ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளவர் அவர்.
[ 'விஷ்ணு விஷால் வெளிப்படையானவர்... அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்': அமலா பால்! ]
மதராஸப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற 'பூக்கள் பூக்கும் தருணம்', ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'உம்மேல ஆசத்தான்', அஞ்சான் படத்தில் வரும் 'ஏக் தோ தீன்' பாடல், கோவா படத்தில் இடம்பெற்ற 'இதுவரை இல்லாத உணர்விது' என ஆண்ட்ரியாவின் ஹிட் லிஸ்ட்டுகள் ஏராளம்.

ஹானஸ்ட்லி இசை ஆல்பம்
அவர் தற்போது ஆங்கில மொழியில் "ஹானஸ்ட்லி" ( Honestly ) வீடியோ ஆல்பமை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை ஆண்ட்ரியாவே எழுதி,பாடி, நடித்தும் உள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கிடாரிஸ்ட் கெபா ஜெரிமியா ஆகியோரின் பங்களிப்பும் இப்பாடலில் உள்ளது.

யூடியூபில் டிரெண்டிங்
இந்த ஆல்பம் கடந்த வாரம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில் இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
பெண்ணுக்கும் ஆணுக்குமான காதல்
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவை மையமாக வைத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது காதலை ஒரு ஆணிடம் வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. அதாவது வீடியோ ஆல்பமில் நடித்துள்ள ஆண்ட்ரியா, தனது கனவு நாயகனை கண்டுபிடித்துவிட்டதாக அந்த பாடல் சொல்கிறது.

யார் அந்த கனவுக்கண்ணன்
காதல் விவகாரத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் அவருடைய இந்த 'ஹானஸ்ட்டான காதல்' யாருக்கு டெடிகேட் செய்யப்பட்டுள்ளது என ஆராயத் தொடங்கியிருக்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.


Click it and Unblock the Notifications











