இதற்காகவா இவ்வளவு பயந்தீங்க விஜய் சேதுபதி?
Recommended Video

சென்னை: என்ன விஜய் சேதுபதி இதற்காகவா இவ்வளவு பயந்தீர்கள்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான 96 படம் ஹிட்டாகியுள்ளது. படத்திற்கு வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
பட ரிலீஸுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி தனது பயத்தை பற்றி பேசினார்.
[ நாம் ஒரே அறையில் தங்குவோமா?: நடிகையிடம் வழிந்த இயக்குனர் ]

எதிர்பார்ப்பு
96 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால் பயமாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்று தெரியும். இருப்பினும் ரொம்ப பயமாக உள்ளது என்றார் விஜய் சேதுபதி. அவர் பயந்தது போன்று எதுவும் நடக்கவில்லை. மாறாக 96 படம் அனைவரையும் திருப்தி அடைய வைத்துள்ளது.
வார நாட்கள்
96 படம் வார இறுதி நாட்களில் ரூ. 1.69 கோடி வசூல் செய்துள்ளது. வார நாட்களில் கூட தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. வார நாட்கள் தானே பகல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கும் என்று நினைத்து சென்றால் சாரி சார், ஃபுல்லா புக்காகிவிட்டது என்கிறார்கள். ஆன்லைனில் கூட டிக்கெட் கிடைப்பது இல்லை.

ரசிகர்கள்
வெளிநாடுகளில் கூட 96 படம் ஓடும் தியேட்டர்கள் கூட்டமாக உள்ளது. படம் பார்க்க செல்கிறவர்கள் ஹவுஸ் ஃபுல்லான தியேட்டரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். படத்தை பார்த்தவர்கள் த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு நிச்சயம் விருது உள்ளது என்கிறார்கள்.

காதல் கொண்டாட்டம்
96 படம் அல்ல மாறாக காதல் கொண்டாட்டம் என்று கூறி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷாவின் அந்த மஞ்சள் நிற குர்தா இன்னும் சில மாதங்களுக்கு நிச்சயம் டிரெண்டில் இருக்கும். ராம், ஜானுவை பார்த்துவிட்டு பழைய காதலை சுகமாக அசை போட்டவர்கள் பலர். காதலி எங்கிருக்கிறாளோ என்று ஏங்கியவர்கள் சிலர். ஆக, படத்தை பார்த்துவிட்டு ஃபீல் ஆகாமல் யாரும் இல்லை.
பெண்கள்
96 படத்தை பார்க்கும் பெண்களுக்கு ராம் போன்ற ஒரு கணவன் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது. அதை சிலர் வெளிப்படையாகவே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு ராமாகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கு போயா இவ்வளவு பயந்தீர்கள் விஜய் சேதுபதி?


Click it and Unblock the Notifications











