நாம் ஒரே அறையில் தங்குவோமா?: நடிகையிடம் வழிந்த இயக்குனர்

By Siva

மும்பை: பாலிவுட் இயக்குனர் விகாஸ் பெஹல் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

குயீன் படத்தில் நடித்தபோது விகாஸ் பெஹல் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்தார். இந்நிலையில் அந்த படத்தில் கங்கனாவின் தோழியாக நடித்த நயனி தீக்சித்தும் விகாஸ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

விகாஸ் பற்றி நயனி கூறியதாவது,

[ இதற்காகவா இவ்வளவு பயந்தீங்க விஜய் சேதுபதி? ]

தவறு

தவறு

குயீன் படத்தில் நடித்தது தான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு. விகாஸ் பெஹல் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்ணை நான் ஆதரிக்கிறேன். விகாஸ் குயீன் படப்பிடிப்பில் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இன்னொரு முறை இப்படி நடந்து கொண்டால் அறைந்துவிடுவேன் என்று நான் அவரை எச்சரித்தேன்.

திட்டு

திட்டு

மறுநாள் படப்பிடிப்பு தளத்தில் என் தலைமுடியில் பிரச்சனை ஏற்பட்டது. உடனே விகாஸ் என்னை திட்டி மோசமாக நடந்து கொண்டார். முதல் நாள் நான் அவரை எச்சரித்ததால் அப்படி நடந்து கொண்டார் என்று புரிந்தது. என்னிடம் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற கடுப்பில் என்னை பழிவாங்கத் துவங்கினார்.

அறை

அறை

எங்களை 2 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்தனர். அந்த ஹோட்டல் வசதியாக இல்லை என்று நான் புகார் தெரிவித்தேன். உடனே விகாஸோ அப்படி என்றால் என் அறையில் என்னுடன் தங்கிக் கொள் என்றார். என்ன ஒரு திமிர். நாங்கள் லண்டன் துமக்தா பாடலை படமாக்கியபோது காஸ்டியூம் டிபார்ட்மென்ட்டில் டெல்லியை சேர்ந்த 21 வயது பெண் இருந்தார். அந்த பெண்ணிடம் விகாஸ் ஓவராக வழிந்தார்.

கங்கனா

கங்கனா

இந்த இயக்குனர் ஏன் எப்பொழுது பார்த்தாலும் என் பின்னாலேயே வருகிறார் என்று அந்த பெண் என்னிடம் கேட்டார். இது கங்கனாவுக்கும் தெரியும். அப்போது நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டேன். சரியான நேரம் வரட்டும் பேசலாம் என்று இருந்தேன். அந்த நேரம் இப்போது தான் வந்துள்ளது. விகாஸின் ஃபேன்டம் ஃபிலிம்ஸ் சரியாக சம்பளம் தர மாட்டார்கள்.

கோல்கேட்

கோல்கேட்

படப்பிடிப்பின்போதும் ஃபேன்டம் ஃபிலிம்ஸ் ஆட்கள் எங்களை முறையாக நடத்தவில்லை. ஒரு முறை என் கை பல்பு மீது பட்டு சுட்டுவிட்டது. அதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து கோல்கேட் பேஸ்ட்டை கொடுத்து காயத்தின் மீது தடவுமாறு கூறினார்கள். என் சம்பள பாக்கி ரூ. 8,000 ரொக்கத்தை தர 8 மாதங்கள் இழுத்தடித்தார்கள். சம்பளத்தை கேட்டு போன் செய்தால் தயாரிப்பாளர் வெளியே சென்றுவிட்டார் என்றார்கள் என நயனி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: mumbai மும்பை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X