பாக்யராஜுக்கு எம்ஜிஆர்.. சாந்தனுவுக்கு விஜய்.. 2 பேரும் சி.எம்.. குடும்பத்தை தொடரும் தாலி பாரம்பரியம்
சென்னை: திரைக்கதை மன்னர் என்று புகழப்பட்ட பாக்யராஜ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் பாக்யராஜ் திருமணத்திலும், சாந்தனு திருமணத்திலும் நிகழ்ந்த ஒரு ஒற்றுமையை பலரும் இப்போது சோகத்தோடு நினைத்து பார்க்கிறார்கள்.
இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாக்யராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக வாழ்க்கையை தொடங்கிய அவர் பிறகு இயக்குநராக மாறினார். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுகின்றன. பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குநராக இருக்கும்போதே அவர் ஹீரோவாகவும் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பாக்யராஜ்: ஒருகட்டத்தில் ஹீரோ மற்றும் இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அவர்; குணசித்திர கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கினார். இப்படி பரபரப்பாக இருந்த பாக்யராஜ்; சில நாட்களுக்கு முன்பு காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. இதன் காரணமாக 73வது வயதில் அவரது உயிர் பிரிந்தது. உடல் முழு அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
எம்ஜிஆரின் கலையுலக வாரிசு: பாக்யராஜை பொறுத்தவரை மறைந்த நடிகரும், முதலமைச்சருமான எம்ஜிஆரின் தீவிரமான ரசிகர் ஆவார். அவரது படங்களால் வெகுவாக ஈர்க்கப்பட்ட அவர்; தன்னுடைய கலையுலக வாரிசு பாக்யராஜ்தான் என்று அறிவிக்கவும் செய்தார். மேலும், எம்ஜிஆர் மீது இருந்த பக்தி காரணமாக சில காலம் அதிமுகவிலும் இணைந்து பயணப்பட்டார் திரைக்கதை மன்னர்.
திருமணமே அவர் தலைமையில்தான்: அதேபோல் இயக்குநர் முதலில் நடிகை பிரவீணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே பிரவீணா உயிரிழந்துவிட்டார். அதனையடுத்துதான் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தவர் எம்ஜிஆர்தான். 1984ஆம் ஆண்டு திருவேற்காடு முருகன் கோயிலில் வைத்து அவர்கள் திருமணம் நடைபெற்றது.
மகன் திருமணம்: பாக்யராஜின் திருமணத்தை எப்படி உச்ச நட்சத்திரம் தலைமையேற்று நடத்தி வைத்தாரோ அதேபோல் அவரது மகன் சாந்தனு திருமணத்தை சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். விஜய்யின் வெறித்தனமான ரசிகர் சாந்தனு ஆவார். அதன் காரணமாக அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. பாக்யராஜுக்கு முதலமைச்சராக இருந்தவர் தாலி எடுத்துக்கொடுத்த பாரம்பரியம்; அவரது மகனுக்கும் இப்போது முதலமைச்சராக இருப்பவர் தாலி எடுத்துக்கொடுத்து தொடர்ந்திருக்கிறது. தந்தையின் திருமணத்திலும், மகனின் திருமணத்திலும் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதை பலரும் இப்போது சோகத்தோடு நினைவுகூர்ந்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
