விஜய்யின் அப்பாவாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்திக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்து !
மும்பை : தனது குணச்சித்திர நடிப்பாலும் அதிரடி வில்லன் கதாபாத்திரங்களாலும் நம் அனைவரையும் அதிர வைத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
இவர் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் தன்னுடைய குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவரது நண்பர்களும் ரசிகர்களும் மற்றும் பல திரைப்பிரபலங்கள் என இவருக்கு வாழ்த்து சொல்லி மகிழ்ந்து வருகின்றனர்.
பாவாடைக்குள் கையைவிட்டப்படி மீரா மிதுன்.. அரசியல் வேற.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

வில்லாதி வில்லன்
பல முன்னணி நடிகர்களுடன் வில்லாதி வில்லனாகவும், சில சமயங்களில் ரசிக்கவைக்கும் அப்பாவாகவும் வந்து நம் அனைவரையும் நெகிழ வைத்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி என கிட்டத்தட்ட 11 மொழிகளில் நடித்து வருகிறார்.

கச்சிதமாக பொருந்தியது
தனது அசாத்திய நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வரும் இவர் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் கனகச்சிதமாக பொருந்தி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

தேசிய விருது
முதன்முதலில் கன்னட படங்களின் மூலம் தனது திரைத்துறை பயணத்தை தொடங்கிய இவர் கன்னடத்தில் வெளியான துரோஹால் என்ற படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

சைக்கோ வில்லன்
நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் சைக்கோ வில்லனுக்கும் இடையில் நடக்கும் விறுவிறுப்பு நிறைந்த கதைகளத்துடன் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் இவரது நடிப்பிற்காக பல விருதுகளையும் வென்று வந்தது.

பிசி ஸ்ரீராம்
பின்னாளில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் குருதிப்புனல் என்ற பெயரில் இயக்கப்பட்டு வெளியாகி பல விருதுகளையும் பாராட்டுக்களை பெற்றது.

காமெடியிலும் கலக்கினார்
தமிழில் தில், பகவதி, பாபா, ஏழுமலை என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பரிச்சயமான வில்லனான வலம் வந்த இவருக்கு சிறந்த நடிகருக்காக பல முறை விருதுகள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவரை படங்களில் பெரும்பாலும் வில்லனாக மட்டுமே பார்த்து வந்த இவர் கில்லி படத்தில் அப்பாவாக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார்.

பாராட்டை பெற்றார்
கில்லி படத்தில் ஒரு சிறந்த அப்பாவாக நடித்து காமெடியில் கலக்கிய இவருக்கு மேலும் பல ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இன்றளவும் கில்லி படத்தில் இவரும் நடிகர் விஜய்யும் இணைந்து அடிக்கும் லூட்டியை பார்த்து ரசித்து வருகின்றனர். போலீஸாக வரும் இடங்களில் கம்பீரமாகவும் அப்பாவாக இருக்கும் இடத்தில் பொறுப்புள்ள தந்தையாகவும் நடித்து பாராட்டுக்களை பெற்றிருப்பார்.

ரசிக்கவைத்தும்
இவ்வாறு தனது நடிப்பால் பயங்கரமான வில்லனாக, சிறந்த அப்பாவாக, குணச்சித்திர நடிகராக என பல கதாபாத்திரங்களின் முலம் நடித்து நம்மை தொடர்ந்து ரசிக்கவைத்தும் அதேசமயம் பயமுறுத்தியும் வரும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு இன்று பிறந்தநாள்.

நிஜ வாழ்க்கையில் ஜென்டில்மேன்
ஜூன் 19 ஆம் தேதியான இன்று இவர் தனது 57வது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் கொண்டாடி வருகிறார். மேலும் இவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக பலரும் வாழ்த்து மழை பொழிந்து வரும் நிலையில் இவரது நண்பர்கள், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே சினிமாவில் வரும் வில்லன் நடிகர்கள் தங்களது எதார்த்த வாழ்க்கையில் மிகவும் நல்லவர்களாக பொறுப்பு உள்ளவர்களாக நாம் பலரையும் பார்த்து உள்ளோம் . அந்த வகையில் ஆசிஷ் வித்யார்த்தியும் நிஜ வாழ்க்கையில் , குடும்ப வாழ்க்கையில் ஜென்டில் மேனாக வாழ்ந்து சாதித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











