நெகட்டிவிட்டியை பரப்பாதீங்க.. ரசிகர்களுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுத்த கார்த்தி!

சென்னை : நடிகர் கார்த்தி சிறப்பான பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவரது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகவுள்ளன.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

’விக்ரம்’..அட 50 நாள் ஆகிவிட்டதா? கமல்ஹாசன் செய்த முறியடிக்க முடியாத சாதனை'

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சிறப்பான பல படங்களில் நடித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இருந்து இவர்கள் இருவரும் தங்களது திரைப்பயணத்தை மிகவும் சக்சஸ்புல்லாக மெயின்டெயின் செய்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் இவர்கள் குடும்பத்திலேயே ஜோதிகாவும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது நடிகர் காத்தி நடிப்பில் விருமன் படத்தை, சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளார். அடுத்த மாதத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இவரது அடுத்தடுத்த படங்கள் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களும் ரிலீசாக உள்ளன.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இதில் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் காவியமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதியும், போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளி ரிலீசாகவும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று படங்களும் வெவ்வேறு ஜானர்களில் வெளியாகவுள்ளது. இவை கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கார்த்தி வீடியோ

இதனிடையே நடிகர் கார்த்தி நெகட்டிவிட்டி குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெகட்டிவிட்டியை வைத்தே தற்காலங்களில் அனைவரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைப்பதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னிலைப்படுத்தப்படும் நெகட்டிவிட்டி

முன்னிலைப்படுத்தப்படும் நெகட்டிவிட்டி

என்ன பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டாலும், எது பிடிக்காது என்பதையே நாம் முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு விஷயத்தை பிடிக்கவில்லை என்று ஹைலைட் செய்து பேசும்போது தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள அனைவரும் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

RajaRaja Cholan Interesting facts | தமிழர்களின் பெருமிதம், Ponniyin Selvan *India | OneIndia Tamil
ரசிகர்களை கவர்ந்த வீடியோ

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

இந்த நெகட்டிவிட்டி யாருக்கும் நல்லதை கொடுக்காது என்று கூறிய கார்த்தி, அனைவரையும் பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை பயிற்சி செய்ய தனக்கும் அதிக காலம் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X