GOAT: மைக் மோகன் வில்லன் இல்லை? கோட் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!
சென்னை: 80 மற்றும் 90 கால கட்டத்தில் வெள்ளி விழா நாயகன் என பெயர் எடுத்த மைக் மோகன் நீண்ட இடைவேளைக்கு பிறகு, தளபதியின் கோட் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அந்த கேரக்டரில் சிறிய திருப்பம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் வந்தாலும் படம் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாக்ஷி சௌத்ரியும் நடித்து வருகிறார்கள். மேலம், பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, பிரேம்ஜி, வைபவ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
படப்பிடிப்பு: தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் என இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதி வரை கோவளத்தில் நடைபெறும் என்றும், இதை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..
GOAT - இந்த ஜோடி சூப்பரா இருக்கே.. மோகன் உடன் சினேகா.. என்னம்மா போஸ் கொடுத்து நிக்கிறாங்க!
இந்த படத்தின் மூலம் மைக் மோகன், பல ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதில் மைக் மோகன், வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் தந்தை, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்து வருகிறார்.அதில் ஒரு கேரக்டர் தான் வில்லன் என்றும் அவருக்கு துணையாக தான் மைக் மோகன் இன்னொரு வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தை மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியிடும் முடிவில் வெங்கட் பிரபு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் விஜயகாந்த்: மேலும், இந்த படத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகர் விஜயகாந்தை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் படத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கேப்டன் விஜயாகந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி தான் படக்குழு இதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











