கமல் அண்ணனுக்கு நடிகர் பிரபுவின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை : கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று திரையுலகின் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலக நாயகன் தனது பிறந்தநாளை தனது சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடுவதற்காக அங்கு சென்றுள்ளார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக அங்கே விரைந்துள்ளார் நடிகர் பிரபு.

கமல் மற்றும் பிரபு அவர்களின் உறவு பற்றியும் அவரது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் உண்டான உறவு பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார்.

திரு கமல் அவர்கள் 5 வயதில் சினிமாவில் நுழைந்து 65 வயது ஆகியிருந்தாலும் பார்த்தா நம்பவே முடியாத அளவுக்கு இருக்கிறார். எனது தந்தை அவரை என்றுமே "மாஸ்டர் கமல்ஹாசன் "என்று தான் அழைப்பார். மேலும் அவரது தந்தை கமலை பற்றி கூறிய வார்த்தைகள் சிலவற்றை பகிர்ந்தார்.

Actor Prabu wishes kamalhassan and shares his memories

என் தந்தை கமல் அண்ணன் மீது பாசம் வைத்து இருந்தார். என் தந்தை அடிக்கடி சொல்லுவாங்க என் திரையுலக வாரிசு கமல் மட்டும் தான் என்று சொல்வார் , கமல் தொழில்நுட்பம் எல்லாம் கற்றுக்கொண்டு என் தோளின் மேல் ஏறி சினிமாவை பார்கிறான் என்று சொல்லி சந்தோசப்படுவார்" என்று பிரபு கமல் அண்ணன் பற்றி தனது தந்தை சிவாஜி கணேசன் தெரிவித்ததை பகிர்ந்தார்.

மேலும் "எங்கள் குடும்பம் மிகவும் பெரிய குடும்பம் .பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு" என்று பாடி என் அண்ணனை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து வந்தார். இன்று அவர் குடும்பத்துடன் மகள்களும் பார்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு " என்றார் பிரபு.

என் அண்ணன் "ரொம்ப அன்பானவர் " ரொம்ப மென்மையானவர் " அவரை அன்பால் எவ்ளோ வேணும் என்றாலும் கட்டிப்போட்டு விடலாம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் "அன்புக்கு அடிமை என் அண்ணன் தான்" என்று கமலின் அன்பு பற்றி புகழ்ந்தார் பிரபு.

சாரு ஹாசன் அண்ணன் அவரது தமி கமல்ஹாசனை ஜனாதிபதியாக பார்க்கக் வேண்டும் என்று ஆசை என்றார். அதே ஆசை தான் எனக்கும். எனக்கு மட்டும் அல்ல கமல் அண்ணனின் ரசிகர்கள், என்னைப்போல் இருக்கும் தம்பிகள் அனைவரின் ஆசையும் இதுதான் என்று கூறி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரபு.

நான் இப்போ செலிபிரிட்டி.. என்னை எப்படி தொட்டு பேசலாம்.. ரசிகையிடம் மல்லுக்கட்டிய திடீர் பாடகி!
தேவர் மகன் திரைப்படத்தில் எப்படி சிவாஜி கணேசனின் மகனாக கமல் நடித்தாரோ அது நடிப்பு அல்ல முழுக்க முழுக்க உண்மையான உறவு. கமல் என்றுமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் தான். அவருக்கு பிரபு வேறில்லை, கமல் வேறில்லை. இவர்களின் உறவு என்றுமே இதுபோலவே பல்லாண்டு காலங்களுக்கு வாழவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X