Vijay - என்னை மாதிரியே நடிக்கிற.. என்னைதான் திட்டுவாங்க.. சஞ்சீவை கலாய்த்த விஜய்

சென்னை: தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஒரு படம் மட்டும் நடிக்கவிருக்கும் அவர் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு அரசியலில் களமிறங்குகிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்திருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவரது நெருங்கிய நண்பர் சஞ்சீவ் அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு நண்பர்கள் வட்டம் குறைவே. அவருக்கென்று சஞ்சீவ், ஸ்ரீநாத், சுஜய், ராம்குமார், மனோஜ் என ஐந்து பேர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போது பழக்கமாகி இன்றுவரை நட்புடன் பழகிவருகின்றனர். விஜய்யும் அடிக்கடி இவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Actor Sanjeev Talks about Vijay at Latest Interview


சஞ்சீவ், ஸ்ரீநாத் சினிமாவில்: விஜய்யின் நண்பர்களில் சஞ்சீவும், ஸ்ரீநாத்தும் சினிமாவில் இருக்கிறார்கள். சஞ்சீவ் சின்னத்திரையில் கோலோச்சிவிட்டு பெரிய திரையில் சில படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஸ்ரீநாத் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவாவிடம் உதவியாளராக இருந்துவிட்டு நடிகராக மாறியவர். அவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் ஸ்ரீநாத்துக்கு இயக்குநர் ஆக வேண்டுமென்பதுதான் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் வேறு வேறு தொழில் செய்துவருகிறார்கள்.

சின்னத்திரையில் கலக்கும் சஞ்சீவ்: சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி ஆனவர். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர், விஜய் டிவி, ராஜ் டிவி உள்ளிட்ட சேனல்களிலும் நடித்து புகழ் பெற்றவர். சஞ்சீவின் நடிப்பிற்கென்று பல வீடுகளில் ரசிகர்களாக இருக்கின்றனர். அதேபோல் சினிமாவிலும் பத்ரி, புதிய கீதை, மாஸ்டர், யானை, பாலைவன சோலை உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Vijay - விஜய்யின் கடைசி படம்.. யார் இயக்கினாலும் தளபதிக்கு சம்பளம் இவ்வளவா?.. அடேங்கப்பா


அப்படியே விஜய்தான்: சஞ்சீவ் நல்ல நடிகர் என்றாலும் அவரது நடிப்பு விஜய்யின் சாயலை ஒத்திருப்பதாக அவ்வப்போது விமர்சனங்களும், ட்ரோல்களும் எழுவதுண்டு. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பும் விஜய்யை நியாபகப்படுத்துவதாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

சஞ்சீவ் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சஞ்சீவ் அளித்த பேட்டி ஒன்றில், “நான் விஜய் போலவே நடிப்பதாக வரும் கமெண்ட்ஸ்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன். விஜய்கூட என்னிடம், 'நீ என்னை மாதிரியே நடிக்கிற. வசனம்கூட என்னை மாதிரியேத்தான் பேசுற. நீ தினமும் சீரியலில் நடிச்சிட்டு இருக்க. ஆனா நானோ வருடத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறேன். அதனால் உன்னை பார்த்து நான் காப்பி அடிக்கிறேன் என்று திட்டுவார்கள் என்று ஜாலியாக பேசினார். நான் வேண்டுமென்றே விஜய்யை போல நடிக்கவில்லை. எதார்த்தமாகத்தான் நடிக்கிறேன்” என்றார்.

SK 21 டைட்டில் இதுவா?.. அட கமல் பட பாட்டா இருக்கே.. சம்பவம் இருக்கு போல

நடிப்பை மாத்துங்க பாஸ்: அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இந்தப் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் சொல்வது எல்லாம் சரி உங்கள் நடிப்பில் கொஞ்சம் வேரியேஷன் காமிங்க பாஸ் என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருப்பதும் அதற்கு பிறகு அரசியலில் இறங்கப்போவதும் குறிப்பிடத்தக்கது. விஜய் சினிமாவைவிட்டு ஒதுங்கிவிட்டால் அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X