Redin Kingsley - திருமண விஷயத்தில் ரெடின் கிங்ஸ்லிக்கு நம்பிக்கை இல்லை.. நண்பர் சொன்னது இதுதான்
சென்னை: Redin Kingsley Marriage (ரெடின் கிங்ஸ்லி திருமணம்) திருமணம் விஷயத்தில் ரெடின் கிங்ஸ்லிக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்று அவரது நண்பரும் நடன அமைப்பாளருமான சதீஷ் தெரிவித்திருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி தமிழ் சினிமாவில் குருப் டான்ஸராக அறிமுகமானவர். அஜித் நடித்த அவள் வருவாளா உள்ளிட்ட படங்களின் பாடல்களில் அவர் நடனம் ஆடியிருக்கிறார்.

மேலும் தனியாக நடன பள்ளி ஒன்றையும் அவர் வைத்திருந்ததாகவும் பேச்சு ஒன்று உண்டு. சூழல் இப்படி இருக்கையில் நெல்சன் திலீப்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
கோலமாவு கோகிலா: அதன்படி நெல்சன் திலீப்குமாரும் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை ஆரம்பித்தார். அப்போது அதில் நடிப்பதற்கு ரெடினுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் படம் பாதியில் நின்றுவிட்டது. இருந்தாலும் இருவருக்குமான நட்பு நீண்டுகொண்டிருந்தது. ஒருவழியாக கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்க அதில் நடித்தார் ரெடின் கிங்ஸ்லி.
நல்ல நடிகர்: அந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார் கிங்ஸ்லி. 46 வயதாகும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். ஆனால் நேற்று மைசூரில் வைத்து சீரியல் மற்றும் சில படங்களில் நடித்திருக்கும் சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.
திடீர் திருமணம்: ரெடின் கிங்ஸ்லில் திடீரென செய்துகொண்ட திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அவர் திருமண பத்திரிகையை வைத்திருந்தார். இதற்கிடையே அவர் சங்கீதாவுடன் பல வருடங்களாகவே லிவிங் டுகெதரில் இருந்ததாகவும் ஒரு பேச்சு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மீரா தங்கம்.. உனக்காக காத்திருக்கிறது.. மகளை நினைத்து விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்
சதீஷ் பேட்டி: இந்நிலையில் அவரது திருமணம் குறித்து ரெடினின் நண்பரும், நடன அமைப்பாளருமான சதீஷ் பேசுகையில், “நானும் ரெடின் கிங்ஸ்லியும் நீண்ட கால நண்பர்கள். அவரது நடன அமைப்பாளர்கள்தான் எனக்கு டான்ஸ் மாஸ்டர்கள். இதனால் தொடர்ந்து எங்களது நட்பு பல வருடங்களாகவே நீண்டு கொண்டிருக்கிறது.
நம்பிக்கை: அவருக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. சீக்கிரம் திருமணம் செய்துகொள் இல்லையென்றால் நேராக 60ஆம் கல்யாணம்தான் என்று நாங்களே கலாய்த்திருக்கிறோம். ஒருகட்டத்தில் சங்கீதாவை அவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டார். இது பல வருட காதல். இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. நானும் அந்தத் திருமணத்துக்கு சென்றிருக்க வேண்டியது. ஆனால் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டுவிட்டதால் அங்கு செல்ல முடியவில்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











