சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்
Recommended Video

சென்னை: பேட்ட திரைப்படத்தில் நடித்தது மிகச் சிறந்த அனுபவம் என்று நடிகர் ஷபீர் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தில் நெருங்கிவா முத்தமிடாதே படத்தில் நடித்த ஷபீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பேட்ட அனுபவம் பற்றி ஷபீர் கூறியதாவது...
இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் வாய்ப்புக்காக இயக்குனரை சந்தித்தேன். பிறகு என்னை ஆடிஷனுக்கு அழைத்தார்கள். மூன்று நான்கு முறை ஆடிஷன் கொடுத்த பிறகு குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானேன்.
[இயக்குனர் லீனா என் கற்பை சூரையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்]
எனக்கு ரஜினி சார், விஜய் சேதுபதி மற்று நவாசுதின் சித்திக்கி ஆகிய மூவருடனும் காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறது. நான் யாரை பார்த்து வளர்ந்தேனோ அவர்களுடனே நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது. நான் அவரை முதன்முதலில் இப்படத்தில் தான் நேரில் பார்த்தேன்.
விஜய் சேதுபதிக்கும் எனக்கும் நல்ல ரேப்போ இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக வர பல விஷயங்கள் சொல்லி கொடுத்தார். இப்படத்தில் பணியாற்றியது பத்து படங்களில் வேலைபார்த்த அனுபவத்தை கொடுத்துள்ளது என்று சொன்னார்.
கிக்பாக்ஸிங் கற்று வரும் ஷபீர் பேட்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னை மற்றும் லக்னோவில் இவரின் பாகங்கள் ஷூட் செய்யப்பட்டுள்ளன. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, சசிகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











