அம்மன்கோயிலில் ஆக்ரோஷ ஆட்டம்: கண்ணாடிகுத்தி நந்திதா காயம்!

By

சென்னை: பாடல் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில்நடிகை நந்திதா ஸ்வேதா காயமடைந்தார்.

தமிழில், அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட சில படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் இப்போது நடிக்கும் படத்துக்கு, ஐபிசி 376 என்று டைட்டில் வைத்துள்ளனர். இது, பாலியல் வன்கொடுமைக்கு எதிரானசட்டம்.

Actress Nandita swetha injured while shooting

இந்தப்படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். இவர், இயக்குனர்கள் பிரபுசாலமன், பாலசேகரனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். பவர் கிங் ஸ்டூடியோ சார்பில்எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தில் நந்திதா ஸ்வேதா இரண்டுலுக்-கில் வருகிறார். ஒன்றுபோலீஸ் அதிகாரி. த்ரில்லர் படமாக உருவாகும் இதில், சூப்பர் சுப்பராயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மகாநதி சங்கர் உட்பட பலர்நடிக்கின்றனர்.

Actress Nandita swetha injured while shooting

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை ஈக்காடுதாங்கல் அருகே அம்மன் கோயில்ஒன்றில் நடந்தது. நடிகை நந்திதா அம்மன்கோயிலின் முன் ஆக்ரோஷமாக ஆடும்காட்சி படமாக்கப்பட்டது.

அப்போதுகீழே கிடந்த கண்ணாடித் துண்டுகள் குத்திக் கிழித்ததில் நந்திதா ஸ்வேதா காலில்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Actress Nandita swetha injured while shooting

இதுபற்றிபடத்தின் இயக்குனர் ராம்குமார் சுப்பாராமனிடம் கேட்டபோது, 'உண்மைதான். கடந்த சனிக்கிழமை இந்தசம்பவம் நடந்தது. ஆக்ரோஷமாக, நந்திதா ஆட வேண்டும். அவர் வேகமாக ஆடினார். அப்போது, தரையில் கிடந்த கண்ணாடித் துண்டுகள்அவர் காலில் குத்தி ரத்தம்கொட்டியது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காலில் பேன்டேஜ்கட்டிக்கொன்டு வந்து மீண்டும் ஆடுகிறேன் என்றார். காலுக்கு அதிக அசைவு இல்லாத அவரது ஆக்‌ஷனை ஷூட்செய்தோம்.

அவருக்கு படத்தில் சண்டைக் காட்சிகளும் இருக்கிறது. அந்தரத்தில் பறந்து எதிரிகளை வேட்டையாடும் காட்சியில் கயிறு கட்டி நடித்தார். அப்போதும் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது என்றார். படத்தின் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது.

சுசிலீக்ஸ் மாதிரியே.. புதிய அவதாரம் எடுத்த பாடகி சுசித்ரா.. பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல! படம் பற்றி அவர் கூறும்போது, இது பெண்களின் பெருமை பேசும் படமாகஇருக்கும். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதைத் தாண்டி யூகிக்க முடியாதமற்றொரு விஷயமும் படத்தில் இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரானபடம் தான். பெண்களுக்கு விழிப்புணர்வைகொடுக்கும் கதை என்றார் ராம்குமார்சுப்பாராமன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X