இந்த வருஷமே சரியில்லையே.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சமந்தா!
ஹைதராபாத்: 2019-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் சமந்தா தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பை தொடர்ந்து வரும் நடிகை சமந்தாவிற்கு, முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு எந்த அளவுக்கு வெற்றி நாயகியாக உள்ளாரோ அதே அளவு சர்ச்சை நாயகியாகவும் மாறி இருக்கிறார் சமந்தா.

தற்போது அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின், இந்தி ரீமேக்கான கபீர் சிங் பட நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் வங்கா கூறிய கருத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் சமந்தா. நீங்கள் ஒரு பெண்ணுடன் ஆழமான காதலில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் அறைந்து கொள்ளக் கூடிய சுதந்திரம் இல்லாவிட்டால் அவர்களிடையே காதல் இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சந்தீப் வங்கா. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தீப் வங்காவின் கருத்தை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

'அர்ஜுன் ரெட்டி’ ரிலீசானபோது அந்த படத்தை சமந்தா பாராட்டியதையும், தற்போது சந்தீப் வங்காவை விமர்சித்ததையும் ஒப்பிட்டு, ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என கேள்வி எழுப்பினர். ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரண் உங்களை அடிக்கும் காட்சியில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கேட்டுள்ளனர்.
காதலரை ரகசியமாக மறுமணம் செய்த அஜித் பட நடிகை
இதற்கும் பதிலடி தந்துள்ள சமந்தா,'ஒரு படத்தை ரசிப்பதும், ஒரு கருத்தை மறுப்பதும் வெவ்வேறு விஷயங்கள். 'அர்ஜுன் ரெட்டி’ படம் எனக்கு பிடித்தது. ஆனால், காதல் என்பது ஒருவரையொருவர் அறைந்துக் கொள்ளும் சுதந்திரம் வேண்டும் என்ற பொதுப்படையான கருத்து எனக்கு பிடிக்கவில்லை’ என்றும் கூறியுள்ளார். ஏனோ ஜோதிகாவை போல சமந்தாவிற்கு இரண்டாவது இன்னிங்ஸ் அவ்வளவு ஸ்மூத்தாக இல்லை.


Click it and Unblock the Notifications











