துப்பாக்கியால் சுடுவேன்: ட்ரோல் செய்பவர்களுக்கு சமந்தா எச்சரிக்கை
Recommended Video

சென்னை: ட்ரோல் செய்பவர்களை முட்டிக்குக் கீழே சுடவேண்டுமென்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் நடிப்பில் சீமாராஜா மற்றும் யூ டர்ன் ஆகிய படங்கள் சமீபத்தில் ரிலீஸாகின. அடுத்ததாக சூப்பர் கில்லாடி, சூப்பர் டீலக்ஸ் படங்கள் ரிலீசாக உள்ளன.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்றபோது நிறைய பரிசுப் பொருட்கள் அடங்கிய ஒரு ஹேண்ட் பேக் கொடுக்கப்பட்டது. அதில் உள்ள பொருட்களை அவர் பார்க்காமல் ஒவ்வொன்றாக கைவிட்டு எடுத்து அவற்றை யாருக்கு பரிசளிப்பார் அல்லது எதற்காக பயன்படுத்துவார் என சொல்லவேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது பேக்கிலிருந்து கைவிலங்கை எடுத்த சமந்தா, அது தன்னுடைய அம்மாவுக்கு என்றார். அவருடைய அம்மா எப்போதும் உடன் இருக்க வேண்டுமென விரும்புவாராம். மேலும், சமந்தாவுக்காக அம்மா பிரார்த்தனை செய்தால் அது நிறைவேறும் என்று சொன்னார்.
[ பழைய நினைப்பில் ஒரே பெட்டில் படுத்து புறம் பேசிய மகத், யாஷிகா, ஐஸ்வர்யா ]
அதேபோல் பேக்கிலிருந்து கத்தியை எடுக்கும்போது, அதை இயக்குனர் முருகதாஸுக்கு கொடுப்பேன், என் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை எட்டுவதற்கு கத்தி திரைப்படம் முக்கிய காரணம் என்று கூறினார்.
அந்த பேக்கிலிருந்து துப்பாக்கியை முதலில் எடுத்துவிட்டு, என்ன செய்வதென்று யோசித்த சமந்தா, கடைசியாக அதை எதற்கு பயன்படுத்துவார் என்பதைச் சொன்னார். ட்ரோல் செய்பவர்களை இந்த துப்பாக்கியைக் கொண்டு முட்டிக்குக் கீழே சுட வேண்டும் என சொல்லி சிரித்த சமந்தா.. "இது நிச்சயம் ட்ரோல் செய்பவர்களுக்குத் தான்" என்றார்.
இறுதியாக பல்ப் கையில் வந்தபோது, சமந்தா சினிமாவிற்கு வருவதற்கு முன்னர், ஒருவன் அவரை ஆறு மாதங்கள் பல்வேறு இடங்களில் பின் தொடர்ந்ததாகவும், ஆறு மாதத்திற்குப் பிறகு "என்னை ஏன் ஃபாலோ பன்ற?" என சமந்தா கேட்டதற்கு.. "நான் உன்ன ஃபாலோ பண்ணவே இல்லையே என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்" என்றும், அது தன்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத பல்ப் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











