கோ பேக் மோடியை தொடர்ந்து இன்னொரு பரபரப்பு ட்வீட் போட்ட ஓவியா.. என்னன்னு நீங்களே பாருங்க!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து அவர் பதிவிட்ட #GoBackModi ட்வீட் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அஜித்தின் தல 61 படத்தை இயக்கப்போவது யார்? இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
இந்நிலையில், தற்போது இன்னொரு ட்வீட்டையும் போட்டு அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளார் நடிகை ஓவியா.

ஓப்பன் ஓவியா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரொம்ப ஓப்பனாக இருந்ததன் காரணமாகவே நடிகை ஓவியாவுக்கு ஆர்மி எல்லாம் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா, விஜய் டிவி மீதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை கிளப்பினார்.

கோ பேக் மோடி
சினிமாவை தாண்டி அரசியல் கருத்துக்களை அதிகம் பேசாத நடிகை ஓவியா, திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு #GoBackModi ட்வீட் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அந்த ட்வீட்டுக்கு 61 ஆயிரம் லைக்குகளும் 20 ஆயிரம் ரீட்வீட்களும் 6 ஆயிரம் கமெண்ட்டுகளும் குவிந்தன.

காவல் நிலையத்தில் புகார்
நடிகை ஓவியாவின் ட்வீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கமெண்ட்டுகள் அவரது ட்வீட்டுக்கு கீழே குவிந்தன. ஓவியாவை பாராட்டியும், மோசமாக திட்டியும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்திருந்தனர். பாஜகவினர் ஓவியாவின் இந்த ட்வீட்டை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.

ஒரு ட்வீட்டுக்கு ஒரு கோடியாம்
நடிகை ஓவியாவின் இந்த கோ பேக் மோடி ட்வீட்டுக்கு அவருக்கு ஒரு கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியாக ஓவியா குதிக்கப் போகிறார் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் வலம் வரத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இன்னொரு ட்வீட்டையும் ஓவியா போட்டு மாஸ் காட்டியுள்ளார்.

சுதந்திரம் இருக்கு
நடிகை ஓவியாவின் கோ பேக் மோடி ட்வீட்டை விமர்சித்தும் அதை சுற்றியும் ஏகப்பட்ட அரசியல் நடைபெற்றும் வரும் நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் #jaihind மற்றும் #freedomofthought என இரு ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார் நடிகை ஓவியா. இதன் மூலமாக தனது கருத்தை சொல்ல தனக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கு என்பதை வெளிப்படையாகக் கூறியுள்ளார் ஓவியா.

குவிகிறது கமெண்ட்ஸ்
இந்த ட்வீட்டுக்கும் தற்போது ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன. இந்த தேசத்தில் அனைவருக்கும் தங்களது சொந்த கருத்துக்களை சொல்லும் அதிகாரம் உள்ளது என்று ஓவியாவுக்கு ஆதரவாகவும், தேவையற்ற பேச்சுக்களை சுதந்திரம் என்கிற பேரில் யாரும் பேசக் கூடாது என எதிர்பாகவும் கமெண்ட்டுகளும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











