லாரன்ஸ் டிஸ்சார்ஜ்.. ஸ்ரீமன் அட்மிட்.. விஜய்க்காக இப்படி வாங்குறாங்களே.. ரொம்ப பாவம்
சென்னை: விஜய் முதலமைச்சரானதில் திரைத்துறையினருக்கு ஏக கொண்டாட்டமாக இருக்கிறது. தங்கள் துறையிலிருந்து ஒருவர் மாநிலத்தை ஆள்கிறார் என்பதால் அவர்கள் தொடர்ந்து நேரில் சந்தித்தும் வருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் லாரன்ஸ் மாஸ்டர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களை நாயோடு ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்ப; பிறகு அதற்கு விளக்கமளித்தார். இப்போது நடிகரும், விஜய்யின் உற்ற நண்பருமான ஸ்ரீமன் பேசியதும் சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறியிருக்கிறார் விஜய். அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தவெக சார்பில் லாரன்ஸ் களமிறங்குவார் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் ஓடின. அவரும் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு,'நான் அரசியலுக்கு வருவதற்கு அம்மா பெர்மிஷன் கொடுத்துவிட்டார்.. தாய்க்கு நிகராக நான் நினைக்கும் என்னுடைய ரசிகர்களும் கருத்து சொல்லுங்கள்' என கேட்டிருந்தார்.

நாயுடன் ஒப்பீடு: பலரும் கலவையான கருத்துக்களை வழங்கிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் லாரன்ஸ். அப்போது பேசிய் அவர், 'நிறைய ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருக்கிறார்கள். நான் யார் பக்கம் செல்வேன் என்பது பெர்சனல். விரைவில் எனது ரசிகர்களை கூட்டி நல்ல முடிவை அறிவிப்பேன். தவெக ஆட்சி அருமையாக இருக்கிறது. கோயில், பள்ளிக்கூடங்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு பாராட்டுக்கள். யாராவது புது ஆள் வந்தால் ரோட்டில் இருக்கும் தெரு நாய்கூட கத்தும்.
அந்த தெரு நாய்க்கு பிடித்த பிஸ்கட் போட வேண்டும். சில தெரு நாய்களுக்கு பிஸ்கட் பிடிக்காது. பிரியாணிதான் பிடிக்கும். அந்த தெரு நாய்க்கு பிடித்ததை போட்டு அது நம்மை பார்த்து கத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாய், வீட்டுக்கே இப்படி என்றால் ஒரு நாட்டை கொடுத்திருக்கிறீர்கள். கொஞ்சம் நேரம் கொடுங்கள். பாசிட்டிவ்வாக யோசியுங்கள். மாற்றம் வந்துவிட்டது. அதற்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்" என கூறி சர்ச்சையை சந்தித்தார். அதற்கு பலரும் எதிர்வினையாற்ற; தான் கூற வந்த கருத்து அது இல்லை என்று விளக்கமும் கொடுத்தார்.
ஸ்ரீமன் பேட்டி: தற்போதுதான் லாரன்ஸ் பிரச்னை அடங்கிய சூழலில்; ஸ்ரீமன் இப்போது ஒரு பேட்டி கொடுத்து நெட்டிசன்களிடம் சிக்கியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "இத்தனை கோடி பேரில் எங்கேயோ இரண்டு பேரோ, நான்கு பேரோ தவறு செய்வதை அவ்வளவு பூதாகரமாக்குகிறார்கள். காத்திருந்து காத்திருந்து பிக் செய்து இதையெல்லாம் செய்கிறார்கள். எது எதுக்கு முதலமைச்சரை இழுக்க வேண்டும் என்ற ஒன்று இருக்கிறது. பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் இல்லையென்றாலும் அவரை Tag செய்து போடுகிறார்கள்" என்றார்.
லாரன்ஸ் டிஸ்சார்ஜ், ஸ்ரீமன் அட்மிட்: அவரது இந்தப் பேட்டியை நெட்டிசன்களோ, 'மாநிலத்தில் மக்களுக்கு பிரச்னை வந்தால் முதலமச்சரைத்தான் கேட்பார்கள். அதிகாரிகளை நம்பி இங்கே யாரும் வாக்கு செலுத்தவில்லை; விஜய்யை நம்பித்தான் வாக்கு செலுத்தியிருக்கிறோம். அப்படி இருக்கையில் ஒரு பிரச்னைக்கு விஜய்யை கேட்காமல் யாரை கேட்பது; கடந்த ஆட்சிகளிலும் முதலமைச்சரைத்தானே கேட்டோம். விஜய்க்கு சப்போர்ட் செய்கிறோம் என்கிற பெயரில் ஏன் இவர்களாக வந்து அட்மிட் ஆகி ட்ரோலுக்கு ஆளாகிறார்கள் என்று கமெண்ட்ஸ் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
