விஜய்யுடன் படம் செய்யுங்கள்.. ஹெச்.வினோத்துக்கு அட்வைஸ் செய்த அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: விஜய்யை வைத்து ஹெச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக அந்தப் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக அனைத்து பிரச்னைகளும் முடிந்து வரும் 23ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இநிந்லையில் அவரது பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஹெச்.வினோத். அவர் சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரை முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் சேர்த்தது. இதனால் பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அஜித்துடன் தொடர்ச்சியாக படங்கள்: அதன்படி முதலில் அஜித்துடன் இணைந்து பிங்க் படத்தை நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்தார். அது தோல்வியை சந்தித்தது தொடர்ந்து வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கினார். அந்தப் படங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்தப் படங்களை எல்லாம் பார்த்த ரசிகர்களோ, வினோத்தின் படங்களா இது நம்பும்படியே இல்லையே என்று நொந்துகொண்டார்கள். அதனையடுத்து விஜய்யுடன் இணைந்தார்.
ஜனநாயகன் வினோத்: அதன்படி ஜனநாயகன் படத்தை இயக்கினார். அதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் இது என பலரும் கூறினாலும்; படத்தின் ட்ரெய்லரில் ஏகப்பட்ட விஷயங்கள் புதுமையாக இருந்ததாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். கண்டிப்பாக இந்தப் படம் விஜய்க்கு மட்டுமின்றி ஹெச்.வினோத்துக்கு இழந்த ஃபார்மையும் மீட்டுக்கொடுக்கும் என அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
ரிலீஸில் பிரச்னை: படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு விஜய்யின் ரசிகர்கள் எல்லாம் தயாராக இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்சார் தரப்பிலிருந்து முட்டுக்கட்டை விழுந்தது. ஒருவழியாக பல பிரச்னைகளை கடந்து 23ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வினோத்தின் பேட்டி: இந்நிலையில் ஹெச்.வினோத்தின் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "அஜித் எல்லா இயக்குநர்களிடமும், 'அடுத்து நீங்கள் படம் செய்தால் விஜய், ரஜினிகூட செய்யுங்கள் என சொல்வார். என்னிடமும் அப்படித்தான் சொன்னார். என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், குடும்ப விழாவுக்கும் பட பூஜைக்கும் அவர் தவறாமல் அழைத்து, 'ஆல் தி பெஸ்ட் சார்.. எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள்' என அன்பாக பேசுவார்.
அப்படித்தான் பார்ப்பார்: அவர் எங்களை குடும்ப உறுப்பினர்களைப் போன்றுதான் நடத்துகிறார். எங்களுக்கெல்லாம் அவர் ஒரு வழிகாட்டி. நாங்கள் அவருடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும், எங்களிடம் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வரசெய்பவர் அவர்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications

