பலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு

By Siva

Recommended Video

மைனர் வயது நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பா நடிகர்- வீடியோ

மும்பை: தன் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்த பெண் இயக்குனரிடம் ரூ. 1 நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் ஆலோக் நாத்.

19 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஆலோக் நாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரும், தயாரிப்பாளருமான வின்டா நந்தா தெரிவித்தார்.

அதன் பிறகு பல பெண்கள் ஆலோக் நாத் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.

[இயக்குனரின் அட்டூழியத்தை அவர் தட்டிக்கேட்கவில்லை: பேட்ட நடிகர் மீது நடிகை புகார்]

நீதிமன்றம்

நீதிமன்றம்

ஆலோக் நாத் வின்டா நந்தாவின் புகாரை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பலாத்காரம் நடந்திருக்கலாம், அதை வேறு யாராவது செய்திருக்கலாம் என்றார். இந்நிலையில் அவர் வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வின்டா மன்னிப்பு கடிதமும், ரூ. 1 நஷ்டஈடும் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஆலோக் நாத்.

எளிது

எளிது

ஆலோக் நாத்தின் வழக்கறிஞர் அசோக் சரோகி கூறியதாவது, வின்டா நந்தா தேவையில்லாமல் ஆலோக்கின் பெயரை கெடுக்கும் விதமாக புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கூறி எளிதில் புகார் தெரிவிக்கலாம். இதில் இருந்தே அவரின் புகார் பொய் என்று தெரிகிறது என்றார்.

புகார்

புகார்

முன்னதாக ஆலோக் நாத்தின் மனைவி ஆஷு சிங் வின்டா நந்தா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வின்டா நந்தா விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆஷு தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆலோக் நாத்தும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வின்டா நந்தா

வின்டா நந்தா

ஆலோக் நாத் வழக்கை சட்டப்படி சந்திப்பேன். அவர் மீது நானும் வழக்கு தொடர்வேன். நான் உண்மையின் பக்கம் உள்ளேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடைசி வரை போராடுவேன் என்று வின்டா நந்தா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X