அரசியல் படம் அமைதிப்படை 2-க்கு நோ கட்.. க்ளீன் யு!

By Shankar

சென்னை: உச்ச கட்ட அரசியல் நய்யாண்டிப் படம் என்ற அடையாளத்துடன் வரவிருக்கும் மணிவண்ணனின் அமைதிப்படை 2-க்கு எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்துள்ளனர் சென்சார் குழுவினர்.

மணிவண்ணன் - சத்யராஜ் - சீமான் கூட்டணியில் வெளியாகும் புதிய படமான நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ (அமைதிப்படை 2) அதில் இடம்பெற்றுள்ள அரசியல் நய்யாண்டி வசனங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிவண்ணனின் 50வது படம் இது. வரும் மே முதல் வாரத்தில் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்தை நேற்று முன் தினம் தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டினர். படத்தை ரசித்துப் பார்த்த அவர்கள், எந்த இடத்தில் கட் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்துவிட்டனர். ஒரே ஒரு வசனத்துக்கு மட்டும் ஒலியை நீக்கிவிட்டனர்.

அரசியல் படமாச்சே, சென்சார் கத்தரியில் சிக்கி சின்னாபின்னாமாகப் போகிறது என பலரும் எதிர்ப்பார்த்த நிலையில், எந்த சர்ச்சைக்கும் இடம் தராமல் சர்ச்சையின்றி வெளியாகிறது இந்த அமைதிப்படை 2.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X