அமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்
Recommended Video

மும்பை: உங்களின் சில்மிஷங்கள் எல்லாம் விரைவில் வெளியே வரும் அமிதாப் பச்சன் என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சப்னா பாவ்னானி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் மீ டூ இயக்கம் முழுவீச்சில் உள்ளது. பல பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சஜித் கான், நடிகர் ஆலோக் நாத் மீது பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமிதாப் பச்சன் பெயரும் மீ டூவில் அடிபடுகிறது.
[அம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்]

நானா படேகர்
தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படகேர் மீது பாலியல் புகார் தெரிவித்தது குறித்து அமிதாப் பச்சனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ என் பெயர் தனுஸ்ரீயோ, நானா படேகரோ இல்லை என்று தெரிவித்தார். எந்த பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் உடனே உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமிதாப்.
அமிதாப் பச்சன்
பிரபல சிகையலங்கார நிபுணரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சப்னா பாவ்னானி அமிதாப் பச்சன் பற்றி ட்வீட்டியுள்ளார். அவர் அமிதாப் பற்றி கூறியிருப்பதாவது, இது தான் மிகப் பெரிய பொய். சார், உங்களின் பிங்க் படம் ரிலீஸாகி, சென்றுவிட்டது. ஆர்வலர் என்ற உங்களின் இமேஜும் விரைவில் போய்விடும். உங்களை பற்றிய உண்மை விரைவில் வெளியே வரும். நகங்கள் போதாது என்பதால் கைகளை கடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்றார். #Metoo #MeTooIndia #comeoutwomen
பெண்கள்
அமிதாப் பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து தனிப்பட்ட முறையில் பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பெண்கள் எல்லாம் வெளியே வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன். அமிதாப் நல்லவர் போன்று நடிப்பதாக கூறுகிறார் சப்னா.
உண்மை
அமிதாப் பச்சன் பற்றிய சப்னாவின் ட்வீட்டை பார்த்து சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் அது உண்மை என்கிறார்கள். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் பெரிய ஆள் என்பதால் அவருக்கு எதிராக எந்த பெண்ணுக்கும் புகார் தெரிவிக்கும் தைரியம் இல்லை என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அமிதாப் பெண்களின் சம்மதத்துடனேயே அவர்களுடன் ஜாலியாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











