அன்பே டயானா.. அந்த நடிப்பு எனக்கு செருப்படி.. இயக்குநர் இரா.சரவணன் ஓபன் டாக்
சென்னை: பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அன்பே டயானா திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இவர் இதற்கு முன்பு இயக்கிய ஜமா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ட்ரெய்லரும் சூப்பர் வரவேற்பை பெற்றுவிட்டது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் இரா. சரவணன் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
ஜமா திரைப்படத்தின் அறிவிப்பு வந்தபோது; அதில் இருந்த தெரிந்த பெயர்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று இளையராஜா, இன்னொன்று சேத்தன். ஹீரோவாக நடித்து படத்தை இயக்கி திரைத்துறையில் அறிமுகமானார் பாரி இளவழகன். இளம் இயக்குநருடன் ராஜா சேர்ந்து பணியாற்றியபோதே இப்படத்தின் மீதான முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. எதிர்பார்த்தபடியே படத்தில் அத்தனை விஷயங்களும் தரமாக இருந்தன. எனவே படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து பெரிய பெயரை பெற்றது.

அன்பே டயானா: இப்போது அவர் அன்பே டயானா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் பாரி, ரோஜா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது படம். இந்நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதனையொட்டி ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் ஆகிய படங்களின் இயக்குநரான இரா. சரவணனும் கலந்துகொண்டு பேசினார்.
சரவணன் பேச்சு: அப்போது பேசிய அவர், "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பட்டியலில் எனது பெயர் இருப்பதே எனக்கு புதிதுதான். பாரி இளவழகன் கதை சொல்லும்போது எல்லா கேரக்டர்களையும் அவரேதான் நடித்து காண்பித்தார். அப்போது நான்,'என்னிடம் பணம் இருந்தால் இந்தப் படத்தை நானே தயாரிப்பேன் என்று யுவராஜ் கணேசனிடம் சொன்னேன். அதற்கு அவரோ, பணம் அதிகம் இல்லையென்றாலும் பரவாயில்லை; தயாரிப்பாளராக வாருங்கள் என அழைத்தார்.
நடுராத்திரியில் ஓடினார்: இரண்டு நாட்களுக்கு முன்புகூட நடு ராத்திரியில் புரோமோஷனுக்கு ஓடிக்கொண்டு இருந்தார். ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்டாதற்கு, 'தன்னுடைய முதல் படம் ஜமா இன்னும் ப்ரோமோஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என பாரி நினைக்கிறார். அதனால் இந்தப் படத்துக்கு அந்த மாதிரி குறை வந்துவிடவே கூடாஅது' என்று கூறினார். இப்படம் வெற்றியடைந்த பிறகு பாரி இளவழகன் இன்னும் பெரிய உயரத்துக்கு செல்வார் என நம்பிக்கை இருக்கிறது.
எழுந்து நின்று: மேலும் தொடர்ந்து பிஸியான இயக்குநராகவும் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 'ரம்யாவின் ஃபோட்டோவை முதலில் பார்த்தபோது எனக்கு பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. ஆனால் படத்தை பார்த்த பிறகுதான் அவருடைய நடிப்பு எனக்கு செருப்படி மாதிரி இருந்தது. ஒரு காட்சியில் ரம்யாவின் நடிப்பை பார்த்து எழுந்து நின்று கை தட்டினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
