Love Oh Love Blue Sattai Maran Review - லவ் ஓ லவ் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. கிழிச்சிட்டாரு ப்பா
சென்னை: மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் லவ் ஓ லவ். நேற்று முன்தினம் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய யூடியூப் சேனலில்; லவ் ஓ லவ் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். பகிர்ந்திருக்கிறார் என்று சொல்வதைவிட; விமர்சனத்தின் மூலம் கிழித்தெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனுஷின் மருமகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் லவ் ஓ லவ். இதில் அவருடன் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்.மகேஷ் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் வெளியான இப்படம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் லவ் ஓ லவ் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சானம்: தனது வீடியோவில், "டைட்டிலை கேட்டவுடன் இவங்க இரண்டு பேரும் பயங்கரமாக காதல் செய்து சேர்ந்திருப்பார்கள் என்றுதானே நினைத்திருப்பீர்கள். ஆனால் படத்தில் சென்று பார்த்தால் இவர்கள் இரண்டு பேரும் எங்கேயும் காதலே செய்யவில்லை. ஒரு பெண்ணை பார்த்ததும் பையனுக்கு பிடிக்கிறது; பிடித்ததும் காதலை சொல்கிறார். அடுத்த சீனிலிருந்து பார்த்தால் அந்தப் பெண் அந்த பையனை மொட்டை அடிக்கவே பார்க்கிறது. அதை வாங்கிக் கொடு, இதை வாங்கிக் கொடு என சொல்லி; அவன் ஊரை சுற்றி கடன் வாங்கி கடன்காரனாக சுற்றுகிறான்.
இப்படிப்பட்ட ஒரு கதை: ஒருகட்டத்துக்கு மேல் என்னால் முடியாது என சொல்கிறான். ஆனால் அந்தப் பெண்ணோ விடமுடியாது என சொல்கிறாள். அதற்கு ஹீரோவோ, இது இனிமேலும் தொடர வேண்டுமென்றால் நான் செய்த மாதிரியே நீயும் செய் என ஹீரோ சொல்கிறார். அந்தப் பெண்ணை மொட்டையடிக்க இந்தப் பையன் முயற்சி செய்கிறான். இப்படிப்பட்ட ஒரு கதை.
இதுதான உலக வழக்கம்: பொதுவாக இரண்டு பேர் காதலிப்பார்கள். ஒன்று பெண்ணை பையன் மொட்டை அடிப்பான்; இல்லையென்றால் பையனை பெண் மொட்டை அடிப்பாள். பிறகு இரண்டு பேரும் பிரிந்துவிடுவார்கள். இப்படித்தானே நாம் கதையை கேட்டிருக்கிறோம். ஒருவனை ஒரு பெண் ஏமாற்றிவிட்டார்; இவ்வளவு செலவு செய்திருக்கிறேன். அதையெல்லாம் மீண்டும் கொடுக்க சொல்லி கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுத்ததை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.
நேர்த்தி இருக்க வேண்டும்தானே: இந்தப் படத்திலோ,மொட்டை அடித்து மொட்டை அடித்து ஹீரோ ஓட பார்க்கையில்; இந்தப் பெண்ணோ நீ வேண்டுமானால் என்னை மொட்டை அடித்துக்கொள் என புதிதாக சொல்கிறார். இப்படி ஒரு கதையை கொண்டு வந்து; கடைசியாக மெசேஜ் வேறு சொல்கிறார்கள். அந்த மெசேஜ் சொல்லும் வரையில் நம் பாடி தாங்காது. எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கதையாக சொல்லலாம். ஆனால் அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும்.
மொட்டை அடித்துவிடுவார்கள்: படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. எப்படி எப்படியோ எடுத்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு மோசமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். குழந்தையை விட்டால்கூட சூப்பராக எடுத்திருக்கும். ஒருத்தருக்கு ஒருத்த மொட்டை அடிப்பதை படமாக எடுத்திருக்கிறார்கள். பார்த்து உஷாராக இருங்கள்; உங்களுக்கும் மொட்டையடித்துவிட போகிறார்கள்" என விளாசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
