வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கைது.. என்ன ஆனது?.. இத்தனை பிரிவுகளில் வழக்கா?

சென்னை: ரீல்ஸ்களால் பிரபலமாகி; பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில படங்களில் நடித்தவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தொடர்ந்து ஏழரைகளை இழுத்துவரும் அவர்; சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும்போதும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் அவர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சோஷியல் மீடியாக்களில் ரிலீஸ்களாக போட்டு ட்ரோல்களில் சிக்கி பிரபலமடைந்தவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். கஜினி திரைப்படத்தில் தர்பூசணி பழத்தை வைத்துக்கொண்டு சூர்யா செய்த ஆக்‌ஷனை செய்து வீடியோ வெளியிட்டார். அப்போதிருந்து தனக்கு தானே அந்தப் பட்டத்தை வைத்துக்கொண்டார். தொடர்ச்சியாக அவர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக; பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளராக வீட்டுக்குள் போனார்.

Bigg Boss Fame Watermelon Star Diwakar Arrested Here s What Happened
Photo Credit:

பாதியில் எவிக்ட்: முதல் ஆளாக சென்ற அவர்; சில வாரங்களிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். குறிப்பாக, கடந்த சீசனில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியை பாடாய் படுத்திய போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட அட்வைஸ்களை சேது சொல்லியும்; திவாகர் கேட்கவில்லை.மேலும் கானா வினோத்தும் கடுமையாக கலாய்த்தார். இவரும் சும்மா இருக்காமல் திவ்யா கணேஷிடம் வழிந்தது, பாருவுடன் முதலில் சண்டை போட்டுவிட்டு; பிறகு தங்கையென சொல்லி உருகியது, அரைகுறை ஆடைகளில் அலைவது என இல்லாத சேட்டைகள் செய்தார். ஒருகட்டத்தில் பாதியிலேயே எவிக்ட் ஆகிவிட்டார்.

Also Read
ஆடுகளம் மாதிரி இதுவும் அமையும்.. அன்பே டயானா விமர்சனம் சொன்ன சமுத்திரகனி.. ஹிட் உறுதி?
ஆடுகளம் மாதிரி இதுவும் அமையும்.. அன்பே டயானா விமர்சனம் சொன்ன சமுத்திரகனி.. ஹிட் உறுதி?

தொடர்ந்து சர்ச்சைகள்: நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவர் சில படங்களில் தலை காண்பித்தார். அதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கேயும் சில பிரச்னைகளை கிளப்ப; பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை வந்தது. அந்த செட்டில் இருந்த ஒருவர்கூட திவாகர் பக்கம் நியாயம் இருப்பதாக சொல்லவில்லை. அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் எல்லாம் அவரை கழுவி கழுவி ஊற்றினார்கள்.

அடுத்த பிரச்னை: ஒருவழியாக அந்தப் பிரச்னையின் சூடு தணிந்தது. ஆனால் அடங்கி இருக்காமல் இன்னொரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்க சென்றபோது அங்கேயும் பஞ்சாயத்தை கூட்டினார். தன்னை அடைத்து வைத்து தாக்குகிறார்கள் என்று வீடியோவை வெளியிட்டு; காவல் துறையிலும் புகார் அளித்தார். இதை பார்த்த நெட்டிசன்களோ, இவருக்கு வேறு வேலையே இல்லையா; சோஷியல் மீடியா மூலம் பிரபலமான அனைவரையும் இவர் அசிங்கப்படுத்துகிறார் என்று ரவுண்டு கட்டி அடித்தார்கள்.

கைதான திவாகர்: இந்நிலையில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரில்; மொத்தம் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள். இந்தக் கைதை கேள்விப்பட்ட பலரும், இவருக்கு இதெல்லாம் வேண்டும்தான் என கொட்டி தீர்க்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X