அன்பே டயானா திருடப்பட்ட கதையா?.. எழுத்தாளர் கூட்டிய பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது

சென்னை: பாரி இளவழகன் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அன்பே டயானா. சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க இந்தப் படத்தின் கதை; எழுத்தாளர் கரண் கார்க்கி எழுதிய சட்டைக்காரி நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

ஜமா படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பாரி இளவழகன்; இரண்டாவதாக இயக்கியிருக்கும் திரைப்படம் அன்பே டயானா. இதில் அவருடன் ரோஜா, ரம்யா ரங்கநாதன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில்; இதன் கதை எழுத்தாளர் கரண் கார்க்கியின் சட்டைக்காரி நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. ஆனால் படத்தை பார்த்தோ கார்க்கியோ, 'அன்பே டயானாவுக்கும், சட்டைக்காரி நாவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என விளக்கியிருந்தார்.

Anbe Diana Makers Threaten Legal Action Over Story Theft Allegations
Photo Credit:

தயாரிப்பாளரின் பதிவு: இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "ஒரு குற்றச்சாட்டை எழுதுவதற்கு மை மட்டும் போதாது; மனசாட்சியும் வேண்டும். ஒரு படைப்பின் மீது 'கதைத் திருட்டு' என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது, வெறும் கருத்து அல்ல. அது ஒரு படைப்பாளியின் பல வருட உழைப்பின் மீது வீசப்படும் சந்தேகத்தின் நிழல். அந்த நிழல், உண்மை வெளிவரும் வரை, அவர் சம்பாதித்த நம்பிக்கையையே விழுங்க முயற்சிக்கும்.

Also Read
Anbe Diana Day 4 Box Office - பாரி இளவழகனின் அன்பே டயானா 4வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
Anbe Diana Day 4 Box Office - பாரி இளவழகனின் அன்பே டயானா 4வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?

​படம் பார்த்த எழுத்தாளர்கள்: நேற்று இரவு எழுத்தாளர்கள் கரண் கார்க்கி, புளியந்தோப்பு மோகன், வினையன் ஆகியோர் 'அன்பே டயானா' திரைப்படத்தைப் பார்த்தனர். படத்தைப் பார்த்த பிறகு நடந்த உரையாடலில், கரண் கார்க்கி தனது "சட்டைக்காரி" நாவலுக்கும் 'அன்பே டயானா' திரைப்படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவாகக் கூறினார்.அப்படியென்றால், படம் பார்க்காமலேயே, உண்மையை உறுதிப்படுத்தாமலேயே, 'கதைத் திருட்டு' என்ற தீர்ப்பை சமூக வலைத்தளங்களில் அறிவித்த அவசரம் எதற்காக?

​மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது: ஓர் எழுத்தாளரின் முதல் பொறுப்பு எழுதுவது அல்ல; உண்மையைத் தேடுவதுதான். உண்மையை ஆராயாமல் எழுதப்படும் வார்த்தைகள், கருத்துகள் அல்ல; அவை ஆதாரமற்ற தீர்ப்புகள்.விமர்சனம் ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டு, நீதியின் அடையாளம் அல்ல. ஒரு படைப்பை விமர்சிப்பதற்கும், ஒரு படைப்பாளியைக் குற்றவாளியாக அறிவிப்பதற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

​மன்னிப்புதான் பதில்: கரண் கார்க்கியின் படைப்புக்கு இருக்கும் மரியாதை எவ்வளவு இருக்கிறதோ, அதே மரியாதை பாரியின் படைப்புக்கும் இருக்க வேண்டும். ஒரு படைப்பாளியின் உரிமையைக் காக்கும் பெயரில், இன்னொரு படைப்பாளியின் நேர்மையைக் காரணமின்றிச் சந்தேகப்படுத்துவது, படைப்புலகையே பலவீனப்படுத்தும். மிக முக்கியமாக, பகிரங்கமாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, தனிப்பட்ட விளக்கம் போதாது; பகிரங்கமான மன்னிப்புதான் பொருத்தமான பதில்.

பாரியின் செயல்: ஏனெனில், சேதம் பொதுவெளியில் நடந்திருந்தால், அதைச் சரிசெய்யும் பொறுப்பும் பொதுவெளியில்தான் இருக்க வேண்டும்.வார்த்தைகள் விதைகள். அவை நம்பிக்கையையும் வளர்க்கலாம்; நஞ்சையும் பரப்பலாம். எந்த விதையை விதைக்கிறோம் என்பதைத் தீர்மானிப்பதுதான் ஓர் எழுத்தாளரின் உண்மையான பொறுப்பு. எழுதுவது மட்டும் அறிவல்ல. உண்மையை உறுதிப்படுத்திய பிறகே எழுதுவதுதான் அறிவு.

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் ஒரு படைப்பாளியை மட்டுமல்ல; உண்மையின் மீதான சமூகத்தின் நம்பிக்கையையும் காயப்படுத்துகின்றன" என குறிப்பிட்டிருக்கிறார். அதனை, பாரி இளவழகனும் ஷேர் செய்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

Read more about: tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X