அன்பே டயானாவில் CM விஜய்க்கு சொன்ன நன்றியை பாருங்க.. அட நம்ம மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிட்டாங்க
சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த நடிகர். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவரது தமிழக வெற்றிக் கழகம் அதிகப்படியான தொகுதிகளில் வென்று, முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அதன் பின்னர் வெளியாகும் சில படங்களில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது.
இப்படி இருக்கையில், அன்பே டயானா படத்தின் டைட்டில் கார்டு போடும் போது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் எழுதி இயக்கி நடித்த பாரி இளவழகன் என இருவரும் இணைந்து தெரிவித்துள்ள நன்றி பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், நம்ம மனசுல இருப்பதை அப்படியே சொல்லி இருக்காங்களே என்பது போல உள்ளது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

ஜமா போன்ற உலகத் தரத்திலான ஒரு படத்தை எழுதி, இயக்கி, நடித்து தனது அறிமுக படத்திலேயே தமிழ் சினிமாவுக்கு புகழ் சேர்த்து மகுடமேற்றியவர், பாரி இளவழகன். ஜமா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முழுக்க முழுக்க கமர்ஷியலாக எழுதி இயக்கி நடித்துள்ள படம் அன்பே டயானா. படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி: இந்நிலையில் படம் ஜூலை 17ஆம் தேதியான நாளை ரிலீஸ் ஆக உள்ள படத்தை. படத்தின் பிரீமியர் காட்சி சென்னையில் நேற்று அதாவது ஜூலை 15ஆம் தேதி திரையிடப்பட்டதால், படம் பார்த்த பலரும் படம் குறித்த தங்களது விமர்சனத்தை பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் படத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதில், " எங்கள் சிறுவயது நினைவுகள் பாதி உங்கள் திரையில் தான் வளர்ந்தது. சிரிக்கவும், கனவு காணவும், விழுந்தால் எழவும் கற்றுக் கொடுத்ததற்கு நன்றிகள் அண்ணா. என்றும் மரியாதையும் அன்பும் - யுவராஜ் கணேசன் மற்றும் பாரி இளவழகன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிடிவ் விமர்சனம்: படக்குழுவின் இந்த நன்றி ரசிகர்கள் பலருக்கும் அட நம்ம மனசுல இருப்பதை அப்படியே சொல்லி இருக்காங்களே என்று பதிவிட்டு வருகிறார்கள். படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் அட்டகாசமான பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் டிக்கெட் புக்கிங்கிலும் இந்த விமர்சனங்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications

