Anbe Diana: அன்பே டயானாவை ரசித்து ரசித்து விமர்சனம் செய்த நெட்டிசன்.. அடேங்கப்பா படம் ஹிட்டுடோய்
சென்னை: ஜமா போன்ற உலகத் தரத்திலான ஒரு படத்தை எழுதி, இயக்கி, நடித்து தனது அறிமுக படத்திலேயே தமிழ் சினிமாவுக்கு புகழ் சேர்த்து மகுடமேற்றியவர், பாரி இளவழகன். ஜமா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முழுக்க முழுக்க கமர்ஷியலாக எழுதி இயக்கி நடித்துள்ள படம் அன்பே டயானா. படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் பேனரில் ஒரு படம் வருகிறது என்றாலே, ஃபீல்குட் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருக்கையில் அன்பே டயானாவின் டீசர், டிரைலர் என எல்லாமே பக்கா கமர்ஷியல் படத்தின் கலர் கொடுத்ததால், ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தார்கள் எனலாம்.
இந்நிலையில் படம் ஜூலை 17ஆம் தேதியான நாளை ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் பிரீமியர் காட்சி சென்னையில் நேற்று அதாவது ஜூலை 15ஆம் தேதி திரையிடப்பட்டதால், படம் பார்த்த பலரும் படம் குறித்த தங்களது விமர்சனத்தை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் படம் குறித்து விரிவாக எழுதி உள்ள விமர்சனம் படக்குழுவினருக்கே நம்பிக்கை அதிகரிக்கும் வகையில் உள்ளது. அதாவது, அவரது விமர்சனத்தில், " படத்தை கலகலப்பான படங்கள் எப்போதுமே மக்கள் மத்தியில நல்ல வரவேற்பைப் பெறும், அப்படிப்பட்ட ஒரு படம் தான் இந்த அன்பே டயானா.

ஒரு Telugu boy & Anglo Indian girl - இப்படி வேற வேற culture சேர்ந்த ரெண்டு பேரும் லவ் பண்ணும்போது வரக்கூடிய பிரச்சினைகள் என்ன, அதை அவங்க எப்படி சரி செய்றாங்க அப்படிங்கிறதுதான் கதை. படத்துல வெறுமனே காதல், காமெடினு மட்டும் இல்லாம, அதுக்குள்ள ஒரு குட்டி மெசேஜையும் சொல்லியிருக்காங்க. அதை ரொம்ப சீரியஸா கொண்டு போகாம, செம ஜாலியா, கலகலப்பா சொன்ன விதம் அருமை.
முழுக்க முழுக்க: குறிப்பா, லவ் மற்றும் காமெடி போர்ஷன்ஸ் எழுதின விதம் சூப்பர்.ஜமா மாதிரி ஒரு படத்தை கொடுத்துட்டு, அதுக்கு அப்படியே நேர் எதிரா இப்படி ஒரு ஜாலியான கதையை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார், பாரி இளவழகன். எழுத்து, இயக்கம், நடிப்புனு எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

குணச்சித்திர கதாபாத்திரங்கள்: ரம்யா ரங்கநாதன் - Magic என்ற கதாபாத்திரத்துல திரையில் நிஜமாவே magic பண்ணியிருக்காங்க. Hey bugger னு நம்மளையே கூப்பிடுற மாதிரி ஒரு ஃபீல். சேத்தன் சார் தான் படத்தோட மெயின் ஹைலைட். அவரோட போர்ஷன்ஸ் எல்லாமே செம்ம ஃபன், தியேட்டர்ல எல்லாரையும் சிரிக்க வச்சிட்டாரு. ரோஜா மேம்க்கு நல்ல வழுவான கதாபாத்திரம், ரொம்ப நீட்டா பண்ணியிருக்காங்க. அரவிந்த் ராஜாவுக்கு ஒரு நல்ல படம் கிடைக்காதானு யோசிச்சிட்டு இருந்தப்ப, இந்த படம் அவருக்கு ஒரு வரப்பிரசாதமா அமைஞ்சிருக்கு. அவரும் சூப்பரா நடிச்சிருக்காரு. படத்தோட இசை கொஞ்சம் டீசண்ட்ட்டா தான் இருந்தது.

ஒரு ஹிட் பார்சல்: படத்தோட கிளைமாக்ஸ் தான் அல்டிமேல்! கடைசி 20 நிமிஷம் முழுக்க முழுக்க காமெடிதான். படம் முடிஞ்சு வெளிய வரும்போது ஒரு திருப்தி இருக்கும். ஒரு படத்துக்கு கிளைமாக்ஸ் எவ்வளவு முக்கியம்கிறதுக்கு இந்த படமும் ஒரு நல்ல உதாரணம். முதல் பாதி டீசண்ட்டா போனாலும், இராண்டாவது பாதி முழுக்க முழுக்க காமெடி. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்க்கு மீண்டும் ஒரு ஹிட் பார்சல். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் போய் தியேட்டரில் பாருங்க, கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து நல்ல படங்கள் பண்ண தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்று விமர்சித்துள்ளார். இவர் மட்டும் இல்லாமல் பலரும் படத்தை பாராட்டி வருவதால் படத்தின் புக்கிங்கில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications

