இந்தியாவிலேயே டாப் இயக்குநர் அட்லீ.. விஜய்யால் அப்படி ஆச்சாம்.. இப்படி புலம்புறாரே ப்பா!

சென்னை: ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ; இப்போது இந்தியாவின் டாப் இயக்குநர்களில் ஒருவர். ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்த அவர்; இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் இதயம் முரளி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் கலந்துகொண்டு அட்லீ பேசியது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மௌன ராகம் படத்தின் மாடர்ன் ரீமேக்தான் அந்தப் படம் என்று விமர்சனம் எழுந்தாலும்; அட்லீயின் மேக்கிங் அனைவரையும் ஈர்த்தது. கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தரமான காதல் படங்களை இயக்கும் இயக்குநராக அவர் ஜொலிப்பார் என்றூதான் எல்லோராலும் கணிக்கப்பட்டிருந்தது.

Atlee Reveals Why He Never Made Another Love Film Praises Atharvaa s Idhayam Murali
Photo Credit:

ரூட்டை மாற்றிய அட்லீ: ஆனால் அவருக்கு இரண்டாவது படமே மாஸ் ஹீரோவான விஜய்யுடன் இணையும் வாய்ப்பு அமைந்தது. எனவே அவருக்காக தன்னுடைய ரூட்டை கமர்ஷியல், மாஸ் பக்கம் திருப்பி தெறி படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்ததாகவும் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். அவற்றில் பிகில் படுதோல்வியை சந்திக்க; மெர்சல் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே கோலிவுட்டில் குறுகிய காலத்திலேயே முதல் வரிசை இயக்குநர்களுடன் சேர்ந்துவிட்டார்.

Also Read
Gatta Kusthi 2 Day 3 Box Office - கட்டா குஸ்தி 2 மூன்றாவது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் செம
Gatta Kusthi 2 Day 3 Box Office - கட்டா குஸ்தி 2 மூன்றாவது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் செம

இந்திய அளவில்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அந்தப் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டாகி மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்தது. எனவே இப்போது அட்லீ பான் இந்திய இயக்குநர் ஆவார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்குக்கு சென்றிருக்கும் அவர்; அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா படத்தை இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் படம் உருவாகிறது.

இதயம் முரளி விழாவில்: இந்நிலையில் இதயம் முரளி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அட்லீ,"ராஜா ராணி படத்துக்கு பிறகு என்னால் ஒரு காதல் படம்கூட செய்ய முடியவில்லை. அதுதான் எனது அடையாளம். ஆனால் செய்ய முடியவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் படங்கள் அமைந்தன. இப்போது சொந்தப் பெருமை எதற்கு?..

பயோபிக்தான் இந்தப் படம்: எனக்கு இதயம் முரளி திரைப்படத்தை அதன் இயக்குநர் ஆகாஷ் காட்டினார். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இது ஆகாஷின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட பயோபிக் திரைப்படம். அந்தப் படத்தில் ஃபகத் பாசில் மாதிரிதான் ஆகாஷுக்கு நான். அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன் என சொன்னேன். ஆனால் அவரே தயாரித்துவிட்டார். அதர்வாவின் அனைத்து படங்களுமே எனக்கு பிடிக்கும். கண்டிப்பாக இந்தப் படம் அவருக்கான ஸ்ட்ரைக்காக அமையும்" என்றார். இதயம் முரளி திரைப்படம் ஜூலை பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X