Gatta Kusthi 2 Day 3 Box Office - கட்டா குஸ்தி 2 மூன்றாவது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் செம

சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக குடும்ப ரசிகர்களிடம் ஒர்க் அவுட் ஆகியிருக்கும் அப்படம்; வசூலிலும் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கட்டா குஸ்தி 2. இதன் முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவுவே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகை மோக்‌ஷா, குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் இந்தப் பாகத்தில் புதிதாக உள்ளே வந்திருக்கிறார்கள்.முதல் பாகத்தின் வெற்றி காரணமாக இந்தப் பாகத்தின் மீதும் பெரிய நம்பிக்கை படக்குழுவுக்கு இருந்தது. அதனால்தான் ரிலீஸுக்கு முன்னரே இயக்குநருக்கு விஷ்ணு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

Gatta Kusthi 2 Day 3 Box Office Collection - Vishnu Vishal s Film Earns 13 85 Crore in India
Photo Credit:

ரசிகர்களிடம் படம் எப்படி?: பத்திரிகையாளர்களிடம் படம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதேசமயம் மக்களிடம் எப்படி எடுபடுமோ என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் நல்வாய்ப்பாக ரசிகர்களிடமும் படம் சூப்பராக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள். இளைஞர்களிடமும் படம் நன்றாகவே கனெக்ட் ஆகியிருப்பதும் கவனிக்கக்கூடிய ஒன்று ஆகும்.

Also Read
வெற்றி மாறன் மகிழ்ச்சியா இருக்க காரணமே சிம்புதான்.. காரணத்தைச் சொல்லி காலரைத் தூக்கிவிடும் ரசிகர்கள்
வெற்றி மாறன் மகிழ்ச்சியா இருக்க காரணமே சிம்புதான்.. காரணத்தைச் சொல்லி காலரைத் தூக்கிவிடும் ரசிகர்கள்

பின்னிய குழந்தை நட்சத்திரம்: முதல் பாகம் போன்றே இதிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கின்றன. அவரும் அதனை சிறப்பான முறையில் செய்து அப்ளாஸை அள்ளியிருக்கிறார். அதேபோல் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சாராவும் கலக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போன பலரும்; கண்டிப்பாக இந்த குழந்தை சினிமாவில் வருங்காலங்களில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் என அடித்து சொல்கிறார்கள்.

வசூல் நிலவரம்: படம் விமர்சன ரீதியாக ஹிட்டாகிவிட்டது. ஸ்க்ரீன்ப்ளே, படத்தின் காமெடி, ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் அனைவரையும் கவர்ந்துவிட; கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் பாக்ஸ் ஆஃபிஸில் வலுவான இடத்தை நோக்கி படம் நகர்ந்துவருகிறது. முதல் நாளில் அந்தப் படம் Sacnilk இணையதளம் வெளியிட்ட தகவல்படி இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாயை வசூலித்தது. அதனையடுத்து இரண்டு நாட்கள் வரிசையாக விடுமுறை வந்தது.

பட்டையை கிளப்பும் வசூல்: படம் ஏற்கனவே குடும்பங்களிடம் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாலும்; இரண்டு நாட்கள் விடுமுறையில் அவர்கள் படம் பார்க்க அதிகளவு சென்றதாலும் படத்துக்கு வசூல் மழை பொழிகிறது. இரண்டாவது நாளில் 4 கோடியே 95 லட்சம் ரூபாயை வசூலித்த கட்டா குஸ்தி 2; மூன்றாவது நாளான நேற்று அதிரடியாக 6 கோடியே 20 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். ஆகமொத்தம் மூன்று நாட்களில் அப்படம் இந்தியாவில் மட்டும் 13 கோடியே 85 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X