பெண்கள் விழிப்புணர்வு படம் தானே? ஐட்டம் பாடல் எதற்கு? சரமாரி கேள்வியால் திணறிய பகாசூரன் இயக்குநர்!
சென்னை : பகாசூரன் திரைப்படம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இயக்குநர் மோகன் ஜி பதிலளிக்க முடியாமல் திணறினார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசூரன் படத்தை இயக்கி உள்ளார்.
இதில், பிரபல இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன், கூல் சுரேஷ், சசிலயா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். பேரரசே பழைய மோகன் ஜிதான்ப்பா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

பகாசூரன்
செப்டம்பர் 17ந் தேதி வெளியான பகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் பகாசூரன் படத்தை பாராட்டி வரும் நிலையில், மோகன் ஜி இயக்கிய முந்தைய திரைப்படங்களைப் போலவே சமூகத்திற்கு எதிராகவும் இளைஞர்களை தவறானவர்களாக சித்தரிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பகாசூரன் பிற்போக்கு தனமாக படமா?
இந்நிலையல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மோகன் ஜி, பகாசூரன் படம் பிற்போக்கு தனமான திரைப்படம் என்ற கருத்து எழுந்துள்ளது. நான் ஒரு முற்போக்கு எழுத்தாளரை உடன்வைத்துக்கொண்டு ஒரு படம் எடுத்தாலும் கூட, மோகன் ஜி இயக்குநர் என்று பெயர் வந்தால், பிற்போக்குத் தனமான படம் என்று தான் சொல்லுவார்கள். என்னுடன் இருப்பவர்கள் என் படத்தின் கருத்தில் தவறு என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன், ஆனால்,யாரோ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

செல்போனின் ஆபத்து
செல்போன் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிப் போய்விட்டதால், அதில் இருக்கும் ஆபத்தை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சொல்லிய திரைப்படம் தான் பகாசூரன். இந்த படத்தை பார்க்கும் பெற்றோர் நிச்சயமாக தனது மகள் மீது கூடுதலாக கவனம் செலுத்துவார்கள் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படமே தவிர, அவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்றார்.

பெண்கள் தற்கொலை செய்துகொள்வதுதான் தீர்வா?
பெண்களுக்கு எதுவுமே தெரியாது, பெண்கள் பலவீனமானவர்கள், பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வதுதான் ஒரே தீர்வு என்று பல காட்சியில் கூறி இருப்பது குறித்து செய்தியாளர் மடக்கி கேள்வி கேட்க, திக்குமுக்காடிப்போன மோகன், தற்கொலை செய்து கொள்ள சொல்லவில்லை. இது போன்ற பாலியல் ரீதியான பிரச்சனையில் சிக்கும் ஒரு பெண், தனியாக போராட முடியாது பெற்றோரிடம் சொல்லி இணைந்து போராட வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.

ஐட்டம் பாடல் எதற்கு
மோகன் ஜியின் பதிலைக் கேட்ட செய்தியாளர், பகாசூரன் பெண்களுக்கான விழிப்புணர்வு படம் என்றால், அந்த படத்தில் ஐட்டம் பாடல் எதற்கு என்று கேட்க, பெண்களின் அங்கங்களை ஆபாசமாக கட்டி படம் எடுப்பவன் நான் இல்லை, அந்த படத்தில் இருக்கும் மற்ற பாடல்களைப்போல இந்த பாடலும் ஒன்று, எனக்கு அந்த பாடலில் ஆபாசம் தெரியவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











