நானும் மகளும் தற்கொலை செய்து கொள்வோம்! - தாடி பாலாஜி மனைவி

By Shankar

சென்னை: தொடர்ந்து எனக்கு வெவ்வேறு நபர்கள் மூலம் மிரட்டல்கள் வருகின்றன. பாலாஜி தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பி வருகிறார். நானும் என் மகளும் தற்கொலை செய்வதைத் தவிர வழியில்லை என்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார்.

காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

Balaji forces us to commit suicide, says wife Nithya

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நித்யா, தாடி பாலாஜி மீது அடுக்கடுக்காக புகார்களைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "என்னை பற்றி தினமும் அவதூறு பரப்பி வருகிறார்கள். போலீசாரிடம் முறையிட்டாலும் பலன் இல்லை. பாலாஜி ஒரு நடிகர் என்பதால் அவருக்கு அரசியல் கட்சியினர், போலீசார், தொலைக்காட்சியினர் உதவியாக இருக்கிறார்கள்.

பாலாஜி ஒரு சந்தேகப் பேர்வழி. திருமணமான புதிதிலேயே என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டார். அவரது முதல் மனைவியிடமும் இதேபோன்று நடந்ததால்தான் அவர் விவாகரத்து பெற்றுள்ளார். பாலாஜியை மனநல மருத்துவரிடம் காண்பித்து 2 முறை கவுன்சிலிங் அழைத்துச் சென்றேன். அதன்பின்னர் அவர் மருத்துவரிடம் வர மறுத்துவிட்டார்.

டப்பிங் ஆடியோ

அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவுக்கும், எனக்கும், போலீஸ்காரர் மனோஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது டப்பிங் செய்யப்பட்டது. நவீன் என்பவர் எனக்கு உதவுபவர்போல் நடித்து, கடைசியில் பாலாஜிக்கு உதவி செய்து என்னை ஏமாற்றிவிட்டார்.

எனது மகளை என்னிடம் இருந்து பிரித்து சென்றுவிட்டால், நான் அவருடன் சென்றுவிடுவேன் என்று எண்ணி அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார் பாலாஜி.

Balaji forces us to commit suicide, says wife Nithya

நான் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த பிறகும் அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஒன்றும் செய்யாத என்னை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று இரவு 11.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

வில்லிவாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், நான் வீடியோ வெளியிடக்கூடாது, பத்திரிகையாளர்களை சந்திக்கக் கூடாது என என்னை மிரட்டுகிறார். எல்லாம் பாலாஜியின் வேலை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி தெரியவில்லை," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X