ஜன நாயகன் பார்க்கிறதுக்கு முன்னாடி பகவந்த் கேசரி படத்தோட கதையை தெரிஞ்சிக்கலாம்.. வாங்க!

சென்னை: கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி நாளை ஜூலை 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

இயக்குநர் எச். வினோத் விஜய்க்கு சொன்ன சில கதைகள் சரியாக மெட்டிரியலைஸ் ஆகாத நிலையில், தனக்கு இந்த படம் பிடிச்சிருக்கு, இதை ரீமேக் பண்ணித் தர முடியுமா என பாலய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தைத் தான் இயக்குநர் வினோத்திடம் போட்டுக் காட்டியுள்ளார்.

Before Watching Jana Nayagan Here We Recap Bhagavanth Kesari Movie Here

பாலய்யா யூனிவர்ஸில் இருக்கும் படத்தை பார்த்து விட்டு சற்றே பயம் வந்தாலும், தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணி விட வேண்டாம் என தனது ஸ்டைலில் கொஞ்சம் ஆல்ட்ரேஷன் செய்து ஜன நாயகன் படத்தை உருவாக்கியிருப்பதாக எச். வினோத் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில், விஜய் விரும்பி தனது கடைசி படமாக பகவந்த் கேசரி ரீமேக் இருக்கட்டும் என நினைக்க என்ன காரணம்? அப்படி அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

Also Read
Vijay's Jana Nayagan Review - ஜனநாயகன் விமர்சனம் சொன்ன விஜய்.. மொத்தம் 2 முறை பார்த்துவிட்டாராம்!
Vijay's Jana Nayagan Review - ஜனநாயகன் விமர்சனம் சொன்ன விஜய்.. மொத்தம் 2 முறை பார்த்துவிட்டாராம்!

பகவந்த் கேசரி கதை: அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், ராம்பால், சரத்குமார், ஆடுகளம் நரேன் நடிப்பில் கடந்த 2023ம் தேதி வெளியான படம்தான் பகவந்த் கேசரி. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பாலகிருஷ்ணா வென்றது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அதிகாரியான சரத்குமார் கார் விபத்தில் உயிரிழக்க சிறையில் இருந்து வெளியே வரும் முன்னாள் காவல்துறை அதிகாரியான பகவந்த் கேசரி சரத்குமாரின் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். சிறு வயதில் இருந்தே அஞ்சி நடுங்கும் அந்த பெண் குழந்தையை எப்படியாவது தைரியம் கொடுத்து ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறார்.

சித்தப்பா பாலகிருஷ்ணாவை ஸ்ரீலீலா தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார். ஸ்ரீலீலாவுக்கு தைரியம் கொடுக்க மனநல மருத்துவரான காஜல் அகர்வால் வர சித்தப்பா பாலகிருஷ்ணாவை அவருடன் டூயட் பாட வைத்து விட்டு ஸ்ரீலீலா தனது காதலுடன் ஜாலியாக சுற்றி வருகிறார்.

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரனாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் தொழிலதிபர் ராம்பால் ஒரு பெரிய புராஜெக்ட்டை அரசு மூலமாக தனக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் நடத்தப் பார்க்கிறார். ராம்பாலின் ரகசியங்களை சேகரித்து அம்பலப்படுத்தும் நோக்கில் பத்திரிகையாளர் ஒருவர் நினைக்க அவரை கொல்ல ராம்பால் ஆட்கள் வருகின்றனர். அந்த ரகசியங்களை காபி ஷாப்பில் ஸ்ரீலீலாவின் லேப்டாப்பில் அவருக்குத் தெரியாமல் ஏற்றி விடுகிறார் அந்த பத்திரிகையாளர்.

Recommended For You
கருப்பு ரெக்கார்ட் காலி.. ஜெட் வேகத்தில் ஜன நாயகன் டிக்கெட் புக்கிங்.. முதலிடத்தில் முதல்வர் விஜய்!
கருப்பு ரெக்கார்ட் காலி.. ஜெட் வேகத்தில் ஜன நாயகன் டிக்கெட் புக்கிங்.. முதலிடத்தில் முதல்வர் விஜய்!

அந்த லேப்டாப் வைத்திருக்கும் பெண்ணை பிடிக்க ராம்பால் ஆட்கள் வர, தனது வளர்ப்பு மகளை காப்பாற்ற இடைவேளையின் போது ராவண மகனாக மாறும் பாலகிருஷ்ணா எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது மட்டுமின்றி வில்லன் ராம்பாலுக்கும் தனக்கும் உள்ள பழைய பகை மற்றும் தன்னை தாண்டி தனது மகளை தொடுடா பார்க்கலாம் என சொல்ல 2வது பாதி சூடு பிடிக்கிறது.

ஸ்ரீலீலாவின் பயத்தைப் போக்க பாலகிருஷ்ணா என்ன செய்தார்? அவருக்கும் வில்லன் ராம் பாலுக்கும் என்ன பஞ்சாயத்து? கொலை குற்றத்துக்காக காவல் அதிகாரியான பாலகிருஷ்ணா ஏன் சிறைக்குச் செல்கிறார் என்பது தான் பகவந்த் கேசரி படத்தின் கதை. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைமில் பகவந்த் கேசரி படத்தையும் ரசிகர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

Before Watching Jana Nayagan Here We Recap Bhagavanth Kesari Movie Here

ஜன நாயகனில் என்ன மாற்றம்?: இதில், ஜன நாயகன் படத்தில் என்ன மாற்றத்தை இயக்குநர் எச். வினோத் செய்திருக்கிறார் என்பதை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் பயந்து வீட்டில் இருக்கக் கூடாது என்றும் சிங்கப்பெண் போல சீறீப் பாய வேண்டும் என்கிற கதைக்கரு தான் தளபதி விஜய்க்கு பிடித்துப் போய் இந்த படத்தை தனது தங்கைகளுக்காக பண்ண முன் வந்துள்ளார் என்று தெளிவாகத் தெரிகிறது.

குட் டச், பேட் டச் என பள்ளியில் இடம்பெறும் ஒரு சீன் குழந்தைகளை கண்டிப்பாக கவரும். ஆனால், ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில், ஓடிடியில் தான் ஜன நாயகன் படத்தை குட்டீஸ்கள் பார்க்க நேரிடும். ஏற்கனவே பலர் திருட்டு பிரின்ட்களை அடம்பிடித்த தங்கள் குழந்தைகளுக்கும் போட்டுக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X