அரை நிர்வாண ஸ்டில்.. விளாசிய நெட்டிசன்ஸ்.. பிக்பாஸ் நடிகை போட்டோவை அதிரடியாக நீக்கிய இன்ஸ்டா!
சென்னை: ரசிகர்கள் விளாசியதை அடுத்து பிரபல பிக்பாஸ் நடிகையின் ஓவர் கிளாமர் புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் நீக்கி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர், நடிகைகளின் ஒரே பொழுதுபோக்காக மாறியிருக்கிறது சமூக வலைதளங்கள்.
வீட்டில் தாங்கள் செய்யும் ஒர்க் அவுட், சமையல், நடனம் உள்ளிட்ட வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அருண் விஜய்க்கு இம்புட்டு அழகா.. தேவதை போல பொண்ணா.. வாயை பிளக்கும் ரசிகர்கள்!z

போட்டோ ஆல்பம்
இதையடுத்து இன்ஸ்டாகிராம் இவர்களின் போட்டோ ஆல்பமாக மாறி இருக்கிறது. தினமும் ஏதாவது ஒன்றிரண்டு புகைப்படத்தை பதிவிடும் நிலைக்கு இவர்கள் சென்றுள்ளனர். இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும் லைக்ஸ்களையும் குவிக்கின்றனர். இதை நடிகைகள் விரும்புவதால், புகைப்படங்கள் பதிவிடுவதை ஒரு வேலையாகவே செய்து வருகின்றனர்.

கிளாமர் போட்டோ
சிலர் தங்கள் த்ரோபேக் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் ரசிகர்கள், சூப்பர், செம, அட்டகாசம், ஆசம் என மானே, தேனே என்று வர்ணித்து கமென்ட் போடுகின்றனர். சிலர் பிகினி போட்டோக்களை பதிவு செய்கின்றனர். இந்நிலையில் சில நடிகைகள் அதையும் தாண்டிய கிளாமர் போட்டோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அரை நிர்வாணம்
இதை சில ரசிகர்கள் விளாசித் தள்ளுகின்றனர். கண்டபடி வசைபாடவும் செய்கின்றனர். ஆனால் இதை யாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் பிரபல பிக்பாஸ் நடிகை பதிவிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படத்தை, சமூக வலைத்தளமான, இன்ஸ்டாகிராம் அதிரடியாக நீக்கியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெனஃப்ஷா சூனாவல்லா
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர், பெனஃப்ஷா சூனாவல்லா. கோவாவைச் சேர்ந்த இவர் எம்.டி.வியில் வீடியோ ஜாக்கியாக இருந்தவர். இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது அரை நிர்வாணப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

கன்னத்தில் முத்தம்
இதற்கு இணையவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அவரை விளாசித் தள்ளினர். இதையடுத்து அவரது அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. இந்நிலையில் தனது காதலர் பிரியங்க் சர்மா தனது கன்னத்தில் முத்தமிடும் வீடியோவை பதிவிட்டு தன் போட்டோவை இன்ஸ்டாகிராம் நீக்கிய தகவலை கூறியுள்ளார்.

ஏற்க முடியவில்லை
இதுபற்றி அவர் கூறும்போது, 'எனது எக்ஸ்ட்ரா ஹாட் போட்டோவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. ஏனென்றால் அவர்களால் அந்த கூடுதல் ஹாட் போட்டோவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாராவது புகார் சொல்லிதான் இது நடந்திருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் பரவாயில்லை.

காத்திருப்பேன்
நிறம், உடல், உடலை காட்டுதல் ஆகியவற்றால் உங்களை தீர்மானிக்காத ஒரு உலகத்துக்காக நான் காத்திருப்பேன்' என்று தெரிவித்துள்ளார். நேர்மறையான இந்த கருத்துக்காக அவரை ரசிகர்கள் சிலர் பாராட்டியுள்ளனர். நடிகை ஒருவரின் அரை நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











