கேமராவுக்காக கமல் பேசினார்...சிம்பு அக்கறையுடன் அழைத்து பேசினார்...நித்யா பாய்ச்சல்
சென்னை : தமிழில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவர் தனது இரண்டாவது மனைவி நித்யாவை தற்போது பிரிந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் போஷிகா என்ற மகள் உள்ள நிலையில், பாலாஜியிடம் மகளுக்காக 20 லட்சம் ரூபாய் கேட்டு நித்யா மிரட்டுவதாக பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல காமெடி நடிகர் பாலாஜி
தமிழ் சினிமாவின் பிரபல காமெடியனாக இருந்தவர் தாடி பாலாஜி. தற்போது தொலைக்காட்சிகளில் பிரபல நிகழ்ச்சிகளில் இவர் இணைந்து செயலாற்றி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் செயல்பட்ட இவர் தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டிலும் காணப்படுகிறார். இந்த நிகழ்ச்சி விரைவில் நிறைவடையவுள்ளது.

பாலாஜி மனைவி நித்யா
இவருக்கு நித்யா என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்று பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களது விவகாரம் தற்போது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக மாறியுள்ளது.

கமலை திட்டிய நித்யா
இந்நிலையில் தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்காக நித்யா 20 லட்சம் ரூபாய் கேட்டு தாடி பாலாஜியை மிரட்டுவதாகவும் உலகநாயகன் கமலை திட்டியதாகவும் தாடி பாலாஜி வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேட்டியொன்றில் பேசிய நித்யா, இதை தான் மறுக்கவில்லை என்று போல்டாக தெரிவித்துள்ளார்.

கேமராவிற்காக பேசிய கமல்
தங்கள் இருவரையும் அழைத்து பேசிய நடிகர் கமல், கேமராவிற்காக மட்டுமே பேசியதாகவும் பர்சனலாக தன்னுடைய பிரச்சினையை தீர்க்கும் வகையில் அவரது பேச்சு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவரை நேரில் சந்திக்க தான் பலமுறை முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கமலை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஆனால் இந்த விஷயத்திற்கு பிறகு தனக்கு அவரை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆதரவாக பேசிய சிம்பு
தொடர்ந்து பேசிய அவர், ஆனால் திரைத்துறையில் இருந்து தனக்கு ஆதரவாக பேசிய ஒரே நடிகர் சிம்பு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் உள்ள சிம்பு, கடந்த 2017லேயே தன்னிடம் தங்களது பிரிவு குறித்து பேசியதாகவும், தொலைபேசியில் பேசிய அவர், தங்களை இணைத்து வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாக ஒரு மணிநேரம் பேசியதாகவும் நித்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிம்புவிற்கு நன்றி சொல்வேன்
சிம்புவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் தான் கண்டிப்பாக இதற்காக நன்றி சொல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு நித்யா கமலை நேரடியாக திட்டியும், சிம்புவை பாராட்டியும் பேசியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாலாஜியின் குற்றச்சாட்டிற்கு நித்யா வெளிப்படையாக தற்போது பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











