செத்த பயலுகளா எப்படி இருக்கீங்க.. என்ன ஆனாலும் தன்னோட பாஷையை தொடரும் ஜிபி முத்து!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சென்டர் ஆப் அட்ராக்ஷனாக மாறியுள்ளார் பிரபல யூடியூபர் ஜிபி முத்து.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் இவருடைய நடவடிக்கைகளை ரசிகர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஜிபி முத்து. இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்பதை முன்னதாகவே இந்த நிகழ்ச்சி யூகித்துள்ளது.
என் கணவர் யாருடனும் சண்டை போட மாட்டார்.. ஜெயிச்சிட்டு வருவார்.. பிக்பாஸ் ஜி.பி. முத்து மனைவி பேட்டி!\

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 9ம் தேதி முதல் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன்.

போட்டியாளர்கள் அறிமுகம்
ஒவ்வொருவரின் தனித்தன்மைகளையும் சரியாக சுட்டிக்காட்டி இந்த அறிமுகத்தை அவர் செய்திருந்தார். ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனியாக வீடியோக்கள் செய்யப்பட்டு அவை, நிகழ்ச்சியின் துவக்கவிழாவில் ஒளிபரப்பப்பட்டன. அவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனிடையே நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

முதல் போட்டியாளர் ஜிபி முத்து
முதல் போட்டியாளரான ஜிபி முத்துவிடம் கலகலப்பாக பேசினார் கமல்ஹாசன். அவரை கலாய்க்கவும் செய்தார். தொடர்ந்து அவருடைய வழக்கமான மொழியில் யாரையும் திட்டக்கூடாது என்றும் எச்சரித்தார். ஆனாலும் ஜிபி முத்து அத்தகைய பேச்சுக்களை வைத்துதான் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

செத்தப் பயலுகளா
இதனால் அவரது இந்த பேச்சுக்களை அவ்வளவு சீக்கிரமாக அவரிடமிருந்து பிரித்து விட முடியாது என்றே தோன்றுகிறது. இன்றைய தினம் செத்தப் பயலுகளா, எப்படி இருக்கீங்க என்று ஒரு வீடியோவில் பேசுகிறார். தொடர்ந்து பனியனுடன் காணப்படும் அவர், தன்னுடைய ட்ரெஸ்ஸிற்காக தான் காத்திருப்பதாக கூறுகிறார்.

என்னுடைய ரேஞ்சே வேற
தன்னுடைய ட்ரெஸ் வந்தால் தன்னுடைய ரேஞ்சே வேறே என்றும் அப்படியே மாடல் மாடலாக போட்டு டான்ஸ் செய்வேன் என்றும் அவர் மேலும் கூறுகிறார். ஜிபி முத்துவின் ஆர்மி துவங்கப்பட்டு, அதில் அவரது பழைய மற்றும் பிக்பாஸ் வீட்டில் அவரது செயல்பாடுகள் அடுத்தடுத்து வீடியோவாக பதிவிடப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











