பிக் பாஸ்ல கலந்துகிட்டீங்கல்ல.. அதெப்படி நித்யா நீங்க மட்டும் தப்பிக்க முடியும்?
பிக் பாஸ் புகழ் நித்யா புதிய படமொன்றில் இரண்டாவது நாயகியாகி இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் 2ல் கலந்து கொண்ட நித்யா, புதிய படமொன்றில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவியான நித்யா. கணவர், மனைவிக்குள் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சினைகள் இன்னும் தீராத நிலையில், சமூக சேவை, அரசியல் கட்சித் தலைவி என மற்ற தளங்களிலும் பிசியாக இயங்கி வருகிறார் நித்யா.

இந்நிலையில், அவர் வெள்ளித்திரையில் நடிகையாகவும் மாறி இருக்கிறார். அப்படத்தில் இரண்டாவது நாயகியாக, கணவரை ஊக்கப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். விரைவில் அப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, குழந்தைகள் பாதுகாப்பை மையப்படுத்தி, அரசாங்கம் சார்பாக எடுக்கப்பட்டு வரும் ஆல்பத்திலும் நித்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசனிலும் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் அடுத்தடுத்து புதிய படவாய்ப்புகள் அமைந்தது. தற்போது அந்தப் பட்டியலில் நித்யாவும் சேர்ந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications











