நோ உப்பு... நோ சர்க்கரை.. பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்… குழம்பிய ஹவுஸ்மெஸ்ட் !

சென்னை : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இது வரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது ராஜு, அமீர், நிரூப், தாமரை, பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகியோருடன் போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது

வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே .

இதில் அமீர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

திங்க் ஸ்மார்ட்

திங்க் ஸ்மார்ட்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், போட்டியின் முக்கிய வாரமாக தற்போதைய வாரம் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சரத்குமார் 3 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வந்தார். இந்த விளையாட்டில் யாராவது ஒருவர் தான் ஜெயிக்க முடியும் இதனால் திங்க் ஸ்மார்ட் என்றார்.

பணப்பெட்டி

பணப்பெட்டி

3 லட்சம் ரூபாய் இருந்த பணப்பெட்டியில் 5 லட்சம் இறுதியாக 6 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பணபெட்டியை யாரும் எடுக்கவில்லை. நான் எடுத்தாலும் எடுத்து விடுவேன் என்று கூறிய, நிரூப் தொகை அதிகமாக அதிகமாக இறுதியாக அதிகரிக்கும் தொகைக்காக காத்துக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது.

Dare & Sacrifice

Dare & Sacrifice

பிக் பாஸ் வீட்டில் இன்று, தில்லு இருந்தா.. ஹலோ சொல்லு டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கிற்காக இரண்டு டெலிபோன்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு தொலைபேசியில் டேர் என்றும் மற்றொரு தொலைபேசியில் சாக்ரிஃபைஸ் என்றும் எழுதப்பட்டு இருந்தது. இதில், எந்த ஃபோன் அடிக்கிறதோ அதில் பிக் பாஸ் கூறும் டாஸ்க்கை போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.

சாக்ரிஃபைஸ் டாஸ்க்

சாக்ரிஃபைஸ் டாஸ்க்

இதையடுத்து, சாக்ரிஃபைஸ் தொலைபேசி மணி அடித்ததும் ஓடி வந்து போனை எடுத்த நிரூப்பிடம் உப்பு, சர்க்கரை, வெங்காயம் இல்லாம் இந்த ஒருவாரம் உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்று பிக் பாஸ் கூறுகிறார். இதை அனைவர் இடத்திலும் கூறினார் நிரூப். ஆனால், நிரூப் கூறியது புரியாததால்,அனைவருக்குள்ளும் சண்டை நடந்தது. இந்த டாஸ்கை செய்தால் என்ன பயன் என்று கேட்டு அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X