வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால், பணப் பெட்டி டாஸ்க் இந்த வாரம் நடக்க இருக்கிறது. இதற்காக யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு 3 லட்சம் பணத்துடன் வெளியேறிய Thamarai Selvi | Sarathkumar, Parampara

பணப்பெட்டியை திறந்து வைத்து போட்டியாளர்களிடம் கண்ணாடி கூண்டிற்குள் நின்றபடி பேசுகிறார். தொகை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும், யாராவது ஒருவர் தான் வெற்றி பெற போகிறார் என்பதால் மற்றவர்களில் ஒருவர் இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவது தான் புத்திசாலித்தனம் என்பது போல் மறைமுகமாக சொல்கிறார்.

என்னது 3 லட்சம் தானா

என்னது 3 லட்சம் தானா

இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள், என்னது வெறும் ரூ.3 லட்சம் தானா. இதை விட பெட்டியை எடுத்து வந்தவருக்கு கொடுக்குற சம்பளம் அதிகம்ன்னு பேசிக்கிறாங்களே. ஏன் இவ்வளவு குறைவான தொகை, கடந்த சீசன்ல ரூ.5 லட்சம் அனுப்புனாங்களே என கேட்டுள்ளனர்.

பிக்பாஸ் ஓடிடி தொகுப்பாளர் இவரா

பிக்பாஸ் ஓடிடி தொகுப்பாளர் இவரா

பிக்பாஸ் தமிழ் ஓடிடி சரத்குமார் சார் தான் தொகுத்து வழங்க போகிறாரா. அதற்காக தான் பணப்பெட்டியை கொண்டு வந்து பிக்பாஸிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளாரா என பலர் கேட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 5 ஐ விட பிக்பாஸ் ஓடிடி மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

யார் போவார்கள் இந்த தொகைக்கு

யார் போவார்கள் இந்த தொகைக்கு

ரூ.3 லட்சம் மட்டும் அனுப்பினால் யார் போவார்கள். ரூ.20 லட்சம் கொடுத்தா கூட போக மாட்டேன் என நிரூப் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த பணப் பெட்டியை யார் எடுக்க போகிறார் என்பது ஒரே குழப்பமாக உள்ளது. அமீர், ஃபைனல்ஸிற்கு போய் விட்டார். ராஜு, பிரியங்கா இருவரும் இறுதிப் போட்டி வரை சென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

நிரூப் இப்படி சொல்லி விட்டார்

நிரூப் இப்படி சொல்லி விட்டார்

ரூ.20 லட்சம் கொடுத்தாலும் போக மாட்டேன் என நிரூப் சொல்லி விட்டார். கதவை திறந்து போகும வரை ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என சொல்லி விட்டார் சிபி. இவர்களில் மீதம் இருப்பது தாமரையும் பாவனியும் தான். ஆனால் தனது பிள்ளைகளுக்காகவும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்காகவும் கடைசி வரை விளையாட முடிவு செய்து விட்டதாக கமலிடம் சொன்னார் தாமரை. வெளியே போக மாட்டேன் என பாவனியும் சொன்னார்.

யாரும் போக மாட்டாங்களோ

யாரும் போக மாட்டாங்களோ

இவர்கள் இதுவரை பேசியதை வைத்து பார்த்தால் இந்த சீசனில் யாரும் பணப் பெட்டியை எடுக்க மாட்டார்களோ. அப்படியானால் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ள அந்த ஒருவரை தவிர மீதமுள்ள ஆறு பேரில் இருந்து ஒருவரை தேர்வு செய்து, டைட்டிலை கொடுப்பது பிக்பாசிற்கு கொஞ்சம் சிரமமான வேலையாக தான் இருக்கும் போலவே என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X