என்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு?
பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த நித்யா, வடக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
சென்னை: தாடி பாலாஜி மனைவியான நித்யா, தேசிய பெண்கள் கட்சி சார்பாக வடக்கு டெல்லியில் போட்டியிட இருக்கிறார்.
சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது மனைவி நித்யாவைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்தாண்டு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி மூலம் நித்யா, தமிழக மக்களிடையே பிரபலமானார்.

மீண்டும் பிரச்சினை:
நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல, மீண்டும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ‘தேசிய பெண்கள் கட்சி' யின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் நித்யா.

டெல்லியில் போட்டி:
லோக்சபா தேர்தலில் அக்கட்சியும் தேசிய அளவில் தனது வேட்பாளர்களை களமிறக்குகிறது. அந்தவகையில் நித்யா வடக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். முதலில் அவர் தமிழகத்தில் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் தான் போட்டியிடுவதாக திட்டமிட்டிருந்தாராம். ஆனால், பாலாஜியால் தனது முடிவை அவர் மாற்றிக் கொண்டார்.

அவதூறு பிரச்சாரம்:
ஏனெனில் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் தனக்கு எதிராக கணவர் பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்பதால், கட்சி நிர்வாகிகள் அவரை தலைநகர் டெல்லியில் போட்டியிட யோசனை கூறியுள்ளனர். அதனை ஏற்றுக் கொண்ட நித்யாவும் டெல்லியில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.

விமர்சனம்:
ஆனால், நித்யாவின் இந்த முடிவை அவரது ஆதரவாளர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. கணவரை எதிர்த்து இவ்வளவு தூரம் போராடும் நீங்கள், அவருக்கு பயந்து இங்கு போட்டியிடாமல், டெல்லியில் போட்டியிடுவது சரியில்லை என சமூகவலைதளங்களில் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











