மாமனாரின் அரசியல் கனவை நிறைவேற்றும் தனுஷ்.. மக்களே உஷார்னு எச்சரிக்கை கொடுக்கும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனுஷ்; சமீபத்திய தேசிய விருது சர்ச்சை குறித்து பேசினார். மேலும் அவரது பேச்சு அரசியலுக்கு வரப்போகிறாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனுஷை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தனுஷ் நாளை தன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அதனையொட்டி திருவள்ளூரில் நேற்று தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது. அதில் தனுஷும் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், 'ராயன் படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஏன் என கேட்கிறார்கள். 3, மயக்கம் என்ன, புதுப்பேட்டை, வடசென்னை, அது ஒரு கனாக்காலம் ஆகிய படங்களுக்கு விருது கொடுக்காதபோது ஏன் என்று யாரும் கேட்கவில்லை. தட்டிக்கொடுங்கள்; தட்டிவிடாதீர்கள்' என பேசியிருந்தார். மேலும் அவர் பல விஷயங்களை பேசியதை வைத்து பார்க்கையில் அவர் அரசியலுக்கு வருவாரோ என்ற சந்தேகமும் பலரிடம் எழுந்திருக்கிறது.

Blue Sattai Maran Launches Scathing Attack on Dhanush After National Award Speech
Photo Credit:

ப்ளூ சட்டை மாறன் பதிவு: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன் எக்ஸ் பக்கத்தில், "சுள்ளான் கடந்து வரும் பாதை:அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து.. தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார். தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார். ஒய் திஸ் கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார்.

Also Read
அஜித்குமாரின் கார் ரேஸ்.. ஆவணப் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. விஜய் சொன்ன சூப்பர் விஷயம்
அஜித்குமாரின் கார் ரேஸ்.. ஆவணப் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. விஜய் சொன்ன சூப்பர் விஷயம்

இவரும் ஒரு சங்கிதான்: உலக மகா சமூக கருத்துகளை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011 இல் நேரில் அழைத்து பாராட்டிய காமடியும் நடந்தது. பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார். படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என‌ தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார். தலீவர் போல இவரும் ஒரு சங்கிதான். ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி.. இமயமலை பாபா, பாஜக பாசம் என‌ மாறினார் தலீவர். இவரும் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.

வேஷம் கட்டினார்: காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேசம் கட்டினார் தலீவர். கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார். 'ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?' என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியலானது. இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார். அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர்.

இந்துத்வா ஆதரவாளர்கள்: ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன‌ ஆசிரியை கலா.. தேசிய விருது நடுவர் என்பது முக்கியமான பாய்ண்ட். இவரது தந்தையும், எல்டர் ப்ரோவும் இந்துத்வா ஆதரவாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை. இவரது குலதெய்வம் கருப்பசாமி.

உறுதியாக நம்புகிறார்கள்: நம் மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல்.... மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே. இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால்.. இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள். ஆனால் விஜய் ஜெயித்தபிறகு... இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.

அதனால்தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார் சுள்ளான். இவருக்கு பின்னால் நிற்கிறது காவிக்கட்சி. மாமனாரின் 'ஆன்மீக ஆட்சி' அமைக்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான். யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது. ஓம் கருப்பசாமி. மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி" என தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X