விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்.. கதறி அழுத தவெக அமைச்சர்.. கலாய்த்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்கள் எமோஷனல் கனெக்ட் ஆகியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க விஜய்யின் ரசிகரும், அமைச்சருமான முகமது பர்வேஸ் கதறி அழுதார். இந்நிலையில் அதனை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இதுதான் விஜய்யுடைய கடைசி படமாகும். எனவே அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எமோஷனில் இருக்கிறார்கள். எப்படியாவது இந்தப் படத்தை மெகா ஹிட்டாக்கிட வேண்டும் என்கிற முனைப்பிலும் இருக்கிறார்கள். அதனால்தன் படம் இணையத்தில் லீக்காகி கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்த்துவிட்டாலும்; சி.எம் ஆன பிறகு ரிலீஸ் ஆவதால் தியேட்டர்களுக்கும் நல்ல கூட்டம் கூடியிருக்கிறது. டிக்கெ முன்பதிவு எல்லாம் படு ஜோராக நடைபெற்றன.

Blue Sattai Maran Trolls Minister Mohammed Parvez After Emotional Reaction To Vijay s Jana Nayagan
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: இந்தக் கொண்டாட்டம் விஜய் ரசிகர்கள் மத்தியில் One Last Dance என்று அழைக்கப்படுகிறது. 18 வயதுக்கு குறைவானவர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் ஓடிடியில் ரிலீஸாகும்வரை காத்திருக்க வேண்டும். அவர்களை தவிர்த்து மற்றவர்கள் இன்று காலையிலிருந்தே தியேட்டரில் குவிய தொடங்கிவிட்டார்கள். படமும் அவர்களுக்கு பிடிக்கவே செய்திருக்கிறது.

Also Read
Jana Nayagan: தளபதி கச்சேரியில் One Last Danceக்காகவே தியேட்டர் போலாம் பசங்களா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Jana Nayagan: தளபதி கச்சேரியில் One Last Danceக்காகவே தியேட்டர் போலாம் பசங்களா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ட்விட்டரில் பாசிட்டிவ்தான்: இதுவரை படம் பார்த்த அனைவருமே ட்விட்டர் தளத்தில் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகிறார்கள். பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்றாலும்; முழுக்க முழுக்க அப்படியே இல்லை; வினோத்தின் ஸ்டைலிலும் சில விஷயங்கள் இருப்பதாக கொண்டாடிவருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க; தியேட்டர்களில் இன்னொரு விஷயமும் அரங்கேறிவருகின்றன. அதாவது, விஜய்யின் கடைசி படம் இது என்பதால் பலரும் கண்ணீர் விட்டு அழவும் செய்கிறார்கள்.

அமைச்சரின் கதறல்: அந்தவகையில் அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று புதுக்கோட்டையில் ஜனநாயகன் படத்தை கட்சி தொண்டர்களுடனும், பல ரசிகர்களுடனும் சேர்ந்து பார்த்தார். முதல் நாள், முதல் காட்சியில் வெள்ளை வேட்டி, சட்டையில் ஜொலித்த அவர்; ஸ்க்ரினில் விஜய் வந்த பிறகு கதறி கதறி அழுதார். இனிமேல் விஜய்யை தியேட்டரில் ரசிக்க முடியாதே என்று ஏங்கி அழுத அவரை; அருகில் இருந்தவர்கள் தேற்றினார்கள். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் அந்த செய்தியை பகிர்ந்திருக்கும் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், "TVK Ministers On Duty" என கலாய்த்திருக்கிறார். முன்னதாக ரிலீஸுக்கு முன்பு தவெகவை சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஜனநாயகன் படம் பற்றி வாயை கொடுத்து வாங்கிக்கட்டினர். ஒரு அமைச்சர் விடுமுறை கேட்டதாக கூறினார்; இன்னொருவரோ ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல் கொண்டாடுங்கள் என கட்டளையிட்டார். அதையெல்லாம் பார்த்த பலரும், தமிழ்நாடு இன்னும் என்ன கூத்தை பார்க்க வேண்டுமோ என எச்சரித்திருந்தார்கள்.

யார் இந்த பர்வேஸ்?: இப்போது அமைச்சர் ஒருவ கதறி அழும் கூத்து நடந்திருக்கிறது. பர்வேஸ் அவருடைய சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ஜாபர் அலி என்ற பெயர் மிக பிரபலம். அவருடைய மகன்தான் இந்த பர்வேஸ். அப்பாவோடு தொடர்ந்து பயணித்த அவர்; விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் ஆனார்; பிறகு மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புக்கு வந்தார்.

அவர் மன்ற தலைவராக இருந்தபோது விஜய் படம் ரிலீஸானால் டிக்கெட் ரேட்டை எல்லாம் கன்னா பின்னாவென்று விற்பார் என்ற பேச்சு புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போதும் உண்டு. தற்போது அவர் அமைச்சர் ஆகிவிட்டார். இருப்பினும் பழைய விஜய் ரசிகராவே அவர் நடந்துகொண்டதை பலரும் சோஷியல் மீடியாவில் ட்ரோல் மெட்டீரியலாக மாற்ற தொடங்கிவிட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X