Jana Nayagan: தளபதி கச்சேரியில் One Last Danceக்காகவே தியேட்டர் போலாம் பசங்களா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வெளிநாடுகள் என எங்கு பார்த்தாலும் அதிகாலை முதலே திரையரங்குகள் திருவிழா போல உள்ளது.. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை வெறும் ரிலீஸாக அல்ல, ஒரு எமோஷனல் தருணமாகவே கொண்டாடி வருகின்றனர்.

ஜனநாயகன் படத்தின் பாடல்கள் வெளியான போதே ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த பாடல் என்றால் அது 'தளபதி கச்சேரி' தான். அனிருத் இசையில் உருவான இந்த பாடல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்த நிலையில், படம் வெளியான பிறகு அந்த பாடலின் இறுதியில் ரசிகர்களுக்காக வைத்திருக்கும் சர்ப்ரைஸ் தான் தற்போது இணையம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பாடலின் இறுதியில் ரசிகர்களின் குரலில் "Anna... One Last Dance" என்று கேட்பதும். அதற்கு விஜய் சம்மதம் தெரிவிப்பதும் ஏற்கனவே பாடலில் இடம் பெற்றதுதான். ஆனால் அதற்கு பின்னர் என்ன என்பது பலரது கேள்வியாக இருந்தது. அந்த டயலாக்கிற்குப் பிறகு சில நொடிகள் அமைதியாக்கி விடுகிறது. காரணம், அதற்கு அடுத்ததாக வருவது ஒரு சாதாரண டான்ஸ் இல்லை.

Also Read
ஒன் லாஸ்ட் டைம் சிம்பதி ஒர்க் ஆகலயா? CM கூட ஆகிடலாம் ஆனால்.. விஜய் ரசிகர்களை சீண்டும் ரஜினி ரசிகர்கள்
ஒன் லாஸ்ட் டைம் சிம்பதி ஒர்க் ஆகலயா? CM கூட ஆகிடலாம் ஆனால்.. விஜய் ரசிகர்களை சீண்டும் ரஜினி ரசிகர்கள்
Jana Nayagan s One Last Dance Becomes a Theatre-Worthy Celebration of Vijay s Cinematic Legacy

லாஸ்ட் டான்ஸ்: பொதுவாக ஒரு துறையில் ஒருவரது கடைசி நாள் என்றால் அதை, "One Last Dance", என்று உணர்வுபூர்வமாக குறிப்பிடுவது வழக்கம். அதை படக்குழு விஜய் ரசிகர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக மாற்றியிருக்கிறது. அனிருத் ஒரு புதிய பீட்டை கொடுத்து அதற்கு விஜய் மாஸ் டான்ஸ் ஆடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக மாற்றி, விஜயின் சினிமா பயணத்தையே நினைவுபடுத்தும் வகையில் அவரது சூப்பர்ஹிட் பாடல்களின் இசை ஒவ்வொன்றாக ஒலிக்க, அதற்கேற்ற ஸ்டெப்களை விஜய் மீண்டும் ஆடி ரசிகர்களுக்கு நாஸ்டால்ஜிக் விருந்தை படக்குழு கொடுத்துள்ளது.

செம்ம டான்ஸ்: யூத், போக்கிரி, கில்லி, மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' உள்ளிட்ட விஜயின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய அடையாளமாக மாறிய பல பாடல்களின் இசை அந்த ஒன்றரை நிமிடத்தில் இடம் பெற்றிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பாடலும் ஒலிக்கும் போதும் திரையரங்குகளில் விசில் சத்தமும் கைதட்டலும் விண்ணை பிளந்ததாக ரசிகர்களே வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Recommended For You
Jana Nayagan X Review - ஜனநாயகன் எக்ஸ் விமர்சனம்.. விஜய்யின் ஒன் லாஸ்ட் டான்ஸ் எப்படி இருக்கு?
Jana Nayagan X Review - ஜனநாயகன் எக்ஸ் விமர்சனம்.. விஜய்யின் ஒன் லாஸ்ட் டான்ஸ் எப்படி இருக்கு?
Jana Nayagan s One Last Dance Becomes a Theatre-Worthy Celebration of Vijay s Cinematic Legacy

சர்ப்ரைஸ் ட்ரீட்: அதிலும் குறிப்பாக, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த One Last Dance பகுதி படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியான பாடலிலோ, லிரிக் வீடியோவிலோ, ஆடியோ டிராக்கிலோ இந்த காட்சி இடம்பெறாததால், திரையரங்கில் பார்த்தவர்களுக்கு அது எதிர்பாராத அனுபவமாக மாறியுள்ளது.

எமோஷ்னல்: இதன் காரணமாக சமூக வலைதளங்களில், "One Last Danceக்காகவே தியேட்டருக்கு போகலாம்", "இந்த ஒன்றரை நிமிடத்துக்காகவே டிக்கெட் காசு கொடுக்கலாம்", "விஜயின் முழு சினிமா பயணத்தையும் ஒரே பாடலில் கொண்டாடியிருக்கிறார்கள்" என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு நடிகரின் கடைசி படம் என்பதற்காக மட்டும் அல்லாமல், அவரது பல ஆண்டுகால திரைப்பயணத்தை ஒரு பாடலின் மூலம் ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டும் முயற்சியாக இந்த One Last Dance காட்சி அமைந்துள்ளதாகவும், ஜனநாயகன் படத்தின் மிகப்பெரிய ரசிகர் மொமென்ட்களில் இதுவும் ஒன்றாக மாறியிருப்பதாகவும் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X