Jana Nayagan X Review - ஜனநாயகன் எக்ஸ் விமர்சனம்.. விஜய்யின் ஒன் லாஸ்ட் டான்ஸ் எப்படி இருக்கு?

சென்னை: விஜய்யின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதுதான் அவரது கடைசி திரைப்படம் என்பதால் படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றை இதில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்தவர் விஜய். பல வெற்றி படங்களை கொடுத்த அவர் இப்போது அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். எனவே ஜனநாயகன் படம்தான் அவருக்கு கடைசி படம். இதனை பெரிய திருவிழா போல் கொண்டாடுவதற்கு கடந்த ஜனவரி மாதமே ரசிகர்கள் தயாரானார்கள். ஆனால் சில பிரச்னைகளால் தள்ளிப்போனது. ஒருவழியாக இன்று படமானது உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

Jana Nayagan X Review  Fans Hail Vijay s One-Man Show  First Half Wins Big
Photo Credit:

குவிந்த ரசிகர்கள்: இந்த கடைசி கொண்டாட்டத்துக்கு, 'One Last Dance' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் படக்குழுவினரும், விஜய்யின் ரசிகர்களும். எனவே அதனை பார்ப்பதற்காக இன்று தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களுமே ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் வைத்திருக்கிறார்.

Also Read
ஜனநாயகன் படம் பார்க்கப்போகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்?.. எங்கே பார்க்கிறார் தெரியுமா?
ஜனநாயகன் படம் பார்க்கப்போகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்?.. எங்கே பார்க்கிறார் தெரியுமா?

ஜனநாயகன் எக்ஸ் விமர்சனம்: படம் பற்றி ட்ரோல் சினிமா என்ற பக்கத்தில், "ஜனநாயகன் முதல் பாதி தரம். தொடக்கம் முதல் இறுதிவரை முழுக்க முழுக்க கூஸ்பம்ப்ஸ் தரும் அனுபவம்.முதல் 20 நிமிடங்கள் முழுவதும் விஜய்யின் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. டைட்டில் கார்டு முதல் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும் தியேட்டரையே அதிர வைக்கின்றன.

புத்திசாலித்தனமான திரைக்கதை, மாஸ் எலிவேஷன் தருணங்கள் என முதல் பாதி சிறப்பாக அமைந்திருக்கிறது. மமிதா பைஜூ, விஜய்யுடன் பகிர்ந்திருக்கும் மனதை தொடும் காட்சிகள் கவர்கின்றன. அனைவரது எதிர்பார்ப்பும் இரண்டாவது பாதியின் மீது" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கதை பழையதுதான்: இந்த ரசிகரோ, "ஜனநாயகன் தளபதி ரசிகனாக இதுவரை படம் நல்ல என்ட்டெர்டெயின்மென்ட்டாக இருக்கிறது. தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால் கதையோ பகவந்த் கேசரிதான். பழைய கதைதான். அதில் சில புதிய மாற்றங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றன. டாக்கு மகாராஜ் படத்தை நினைவூட்டும் விஷயஙக்ளும் இருக்கின்றன. அந்தப் படத்தையே ரீமே செய்திருக்கலாமே என்றும் எண்ணம் தோன்றுகிறது" என ப்ளஸ், மைனஸ் இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

விஜய் ஒன் மேன் ஷோ: இந்த ரசிகர், "ஜனநாயகன் படம் பழைய பாணி மாஸ் கமர்ஷியல் என்ட்டெர்டெயினர். விஜய் ஒன் மேன் ஷோ. ஆக்‌ஷன், எமோஷன், நகைச்சுவை,நடனம் என அனைத்திலும் சிறப்பாக ரசிக்க வைக்கிறார். அறிமுக காட்சி தளபதி கச்சேரி பாடல் மற்றும் இடைவேளை ஆகியவை ரசிகர்களை கொண்டாட வைத்த தருணங்கள். ஒரு காட்சியில் கத்தி படத்தை நினைவூஉட்டும் பிஜிஎம்மும், ராவண பிஜிஎம்மும் மிரட்டல். பகவந்த் கேசரி கதையை மாற்றி பெரிய நோக்கத்துடன் கூடிய வில்லன் டிராக்கை இணைத்து வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்.விறுவிறுப்பாம கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்திருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதே ரசிகர் இரண்டாவது பாதி குறித்து, "விஜய்யின் திரை ஆளுமையா அனைத்தையும் விஞ்சும் ஒரு மாஸ் மசாலா என்ட்டெர்டெயினர். இரண்டாவது பாதி அரசியல் மற்றும் ஆக்‌ஷன் தளத்துக்கு நகர்கிறது. விஜய் தன் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்திருக்கிறார். குட் டச், பேட் டச் சீன் குடும்ப ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. இது முழுக்க முழுக்க விஜய்யின் படம். சில குறைகள், பழைய பாணி இருந்தாலும் தேவையான அளவு பொழுதுபோக்கை கொடுக்கிறது அதற்கு காரணம் விஜய்யின் திரை ஆளுமை" என குறிபிட்டிருக்கிறார்.

சிறப்பாக வேலை செய்திருக்கிறது: இன்னொரு ரசிகரும் பாசிடிவ்வாகவே பதிவிட்டிருக்கிறார். அவர் தன்னுடைய பதிவில், "விஜய், மமிதா இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பு படம் முழுவதும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. விஜய் வழக்கம்போல் திரையை அதிர வைக்க்கிறார். அனிருத்தின் எமோஷனல் மற்றும் மாஸ் பின்னணி இசை காட்சிகளுடன் சிறப்பாக ஒன்றிணைந்திருக்கிறது. பாபி தியோல் தொடர்பான காட்சிகள் கொஞ்சம் தொய்வாக இருக்கின்றன. தளபதி கச்சேரி பாடலும், இடைவேளை காட்சியும் கொண்டாட்ட அனுபவத்தை வழங்குகின்றன. படத்தில் பல விஷயங்கள் பகவந்த் கேசரி படத்தை நினைவுப்படுத்தினாலும் வினோத்தின் திரைக்கதை அதில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X