ஜனநாயகன் படம் பார்க்கப்போகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்?.. எங்கே பார்க்கிறார் தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதுதான் அவரது கடைசி படம் என்பதால் இதனை பார்ப்பதற்கு அனைவருமே உச்சக்கட்ட ஆர்வத்தில் இருக்கிறார்கள். இங்கே அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லாததால்; பக்கத்து மாநிலங்களுக்கு சென்று பார்த்துவருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பல பிரச்னைகளை தாண்டி இன்று தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாக 18 வயதுக்குட்பட்டோர் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தங்களை தியேட்டருக்கு அழைத்து செல்ல வேண்டும் என சொல்லி சிறுவர்களும் சிறுமிகளும் அழுத வீடியோவும் ட்ரெண்டானது.

திருவிழா கோலம்தான்: இப்படி பல விஷயங்களுக்கு மத்தியில் படமானது இன்று ரிலீஸாகிறது. இனிமேல் திரையில் விஜய்யை பார்க்க முடியாது என்பதால்; இதனை ஒரு தரிசனமாகவே பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். பலரும் எமோஷனலாக சோஷியல் மீடியாவில் போஸ்ட் போடுவதையும் பார்க்க முடிகிறது. மேற்கொண்டு டைட்டில் கார்டில், முதலமைச்சர் விஜய் என வருகையில் பலரும் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள் என்பதும் உறுதியான ஒன்றுதான். ஆகமொத்தம் இன்று தியேட்டர்கள் திருவிழா கோலம் பூணவிருக்கிறது.
படம் பார்க்கும் ஜேசன் சஞ்சய்?: ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஜனநாயகன் படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பார்க்கவிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்போது அவர் தேனியில் இருப்பதாகவும்; அங்கே வைத்து தன் தந்தையின் படத்தை முதல் காட்சியே பார்க்க திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் Vs ஜேசன் சஞ்சய்?: முன்னதாக, விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் வந்து நிற்கிறது. இந்த விஷயத்தில் ஜேசனும், திவ்யா சாஷாவும் முழுக்க முழுக்க தன்னுடைய தாயின் பக்கம்தான் நிற்கிறார்களாம். கடந்த சில வருடங்களாகவே அவர்கள் விஜய்யோடு பேசுவதில்லை என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தை ஜேசன் பார்க்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தளபதி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தள்ளிப்போன சிக்மா: இதற்கிடையே ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் அப்படம் ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனநாயகன் இன்று ரிலீஸாகியிருப்பதன் காரணமாக; சிக்மா ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதாகவும் தெரிகிறது. எப்போது ரிலீஸாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

