தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்.. நம்ம கே. பாக்யராஜ் அணி வெற்றி.. தலைவராகிறார் சேரன்

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் பாக்யராஜ் மறைவை அடுத்து தள்ளி வைக்கப்பட்டு இன்று நடந்தது. வாக்குப்பதிவில் திரைத்துறையினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினார்கள். இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவில் நம்ம கே. பாக்யராஜ் அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள், இயக்குநர்கள்தான் அச்சாணி. அப்படி எழுத்துக்கென்று தனியாக கோலிவுட்டில் செயல்படும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம். மறைந்த திரைக்கதை மன்னன் பாக்யராஜ்தான் இதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் நாற்காலியில் இருந்த சமயத்தில்தான்; சர்கார் பட பிரச்னையில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்தது. அவர் சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

Cheran Wins South Indian Film Writers Association Election Namma K Bhagyaraj Team Sweeps Polls
Photo Credit:

இரண்டு அணிகளுக்குள்தான் போட்டியே: அதனையடுத்து 12ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நம்ம கே. பாக்யராஜ் அணியில், சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ளிட்ட பலர் போட்டியிட்டார்கள். திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அணியில் குகநாதன் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். இந்த இரண்டு அணிகளின் போட்டி ஒட்டுமொத்த திரைத்துறையிலும் கவனத்தை ஈர்த்தது.

Also Read
3 தேசிய விருதுகளை அள்ளிய அமரன்.. தயாரிப்பாளர் கமல்ஹாசன் செம ஹேப்பி.. சூப்பர் வாழ்த்து
3 தேசிய விருதுகளை அள்ளிய அமரன்.. தயாரிப்பாளர் கமல்ஹாசன் செம ஹேப்பி.. சூப்பர் வாழ்த்து

இன்று தேர்தல்: அறிவித்தபடி இன்று தேர்தல் வடபழனியில் நடைபெற்றது. மொத்தம் 692 உறுப்பினர்கள் சங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் 483 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். தலைவர் உட்பட மொத்தம் 21 பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலையிலிருந்து திரைத்துறையினர் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் வந்து செலுத்திவிட்டு சென்றார்கள்.

Recommended For You
கடற்கரையில் மல்லாக்க படுத்து.. நீச்சல் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் 90s கனவுக்கன்னி மாளவிகா!
கடற்கரையில் மல்லாக்க படுத்து.. நீச்சல் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் 90s கனவுக்கன்னி மாளவிகா!

சேரன் வெற்றி: வாக்குப்பதிவின்போது இரண்டு அணிகளுக்கு இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் நிகழாமல் நல்லபடியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இன்றே ரிசல்ட்டும் சொல்லப்பட்டது. அதன்படி நம்ம கே. பாக்யராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேரன் வெற்றி பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து முன்னிலை: முன்னதாக, வாக்குகள் எண்ண தொடங்கியதிலிருந்தே சேரன் முன்னிலையில்தான் இருந்தார். தபால் வாக்குகள் உட்பட பதிவான 437 வாக்குகளில் நம்ம கே. பாக்யராஜ் அணிதான் முன்னிலை. தபால் வாக்குகளில்கூட அந்த அணி 12 வாக்குகளும், திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அணி 2 வாக்குகளும் பெற்றன. இறுதியில் நம்ம கே. பாக்யராஜ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சேரனுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

Read more about: cheran சேரன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X